பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்தது மே.வங்கம்தான்.. பாஜக தலைவர்களின் புது டார்கெட்.. 75 தொகுதிகளில் போட்டியிட நிதீஷ் திட்டம்?!

மேற்கு வங்கத்தில் நிதிஷ்குமார் 75 இடங்களில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது

Google Oneindia Tamil News

பாட்னா: வரப்போகும் மே.வங்க சட்டசபை தேர்தலில் 75 தொகுதிகளில் போட்டியிட பீகாரின் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும்தான் கடுமையான போட்டி ஏற்பட உள்ளது!

பீகார் சட்டசபை தேர்தலில் பெற்ற வெற்றியை அடுத்து, அடுத்த வருஷம் நடக்க போகும், மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது.

பீகார் சட்டசபை தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களை பிடித்து, ஆட்சியை மறுபடியும் தக்க வைத்துள்ளது.

பாஜக கூட்டணியால்... கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு காத்திருக்கும் 'பயங்கர' ஷாக்.. அதிரடி சர்வே! பாஜக கூட்டணியால்... கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு காத்திருக்கும் 'பயங்கர' ஷாக்.. அதிரடி சர்வே!

பாஜக

பாஜக

மேலும், கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளத்தை விட, அதிக தொகுதிகளில், பாஜக வெற்றியும் பெற்றுள்ளது.. அதாவது 74 தொகுதிகளில் வென்று, மாநிலத்தில், 2வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில்தான், பீகாரை அடுத்து மேற்கு வங்கம் பக்கம் பாஜக திரும்பி உள்ளது.. 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்க சட்டசபை தேர்தல் 2021-ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது.

பிரச்சாரம்

பிரச்சாரம்

தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருந்தாலும், அரசியல் கட்சியினர் இப்போதே அதற்கான பிரசார கூட்டங்களை நடத்த ஆரம்பித்துவிட்டனர்.. வரும் சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும்தான் கடுமையான, மற்றும் நேரடி போட்டி ஏற்பட உள்ளது... ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு திரிணாமுல் காங்கிரசும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.. அதேபோல, இந்த முறை மே.வங்கத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டு வர பாஜகவும் முனைப்பு காட்டி வருகிறது.

 75 தொகுதிகள்

75 தொகுதிகள்

அந்த வகையில், பீகார் மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, மேற்குவங்க மாநிலத்தில் 75 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது.. இதுகுறித்து அக்கட்சி மேற்குவங்க மாநில தலைவர் குலாம் ரசூல் சொன்னதாவது, "மாநிலத்தில் சிலிகுரி, முர்ஷிதாபாத், மால்தா, தினாஜ்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஐக்கிய ஜனதா தளத்திற்கு கணிசமாக ஓட்டு வங்கி இருக்கிறது.. எனவே இந்த மாவட்டங்களில் 75 தொகுதிகளில் நிதிஷ்குமார் போட்டியிட திட்டமிட்டுள்ளார்... தேர்தல் தேதி அறிவித்தவுடன் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும்" என்றார்.

 சட்டசபை தேர்தல்

சட்டசபை தேர்தல்

கடந்த, 2016 வரை, இந்த மாநிலத்தில், பாஜக அந்த அளவுக்கு பலத்தை பெறாமல்தான் இருந்தது.. ஆனால், கடந்த வருடம் நடந்த லோக்சபா தேர்தலில், 42 தொகுதிகளில், 18ல் பாஜக வெற்றி பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது... அதனால்தான், சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று, மாநிலத்தில் ஆட்சியமைக்க முடியும் என்ற நம்பிக்கை பாஜகவுக்கு உள்ளது.

 மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

அதற்கேற்றார்போல, மாநிலத்தில், காங்கிரஸ், இடதுசாரி, திரிணமுல் கட்சிகளின் மூத்த தலைவர்கள், பாஜவுக்கும் தாவி வருவது அக்கட்சிக்கு மேலும் நம்பிக்கையை தந்து வருகிறது... சுவேந்து அதிகாரி நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். அடுத்த வாரம் அமித்ஷா மேற்கு வங்கம் செல்லவிருப்பதால், அவர் முன்னிலையில் சுவேந்து அதிகாரி பாஜகவில் இணைய உள்ளதாக தெரிகிறது... இது மம்தா பானர்ஜிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

 பாஜக

பாஜக

அதுமட்டுமல்ல, "மே. வங்க மக்கள், முதல்வர் மம்தா பானர்ஜி மீது கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள்.. எனவே, சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெற்றால் ஆச்சரியமில்லை" என்று அக்கட்சி தலைவர்கள் இப்போதே சொல்ல ஆரம்பித்துவிட்டனர்... அந்தவகையில், மேற்கு வங்கத்தில் தேர்தல் களம் களைகட்ட ஆரம்பித்துவிட்டது!

English summary
West bengal elections Nitish Kumars party plans to contest atleast 75 seats
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X