பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகார்: மோடிக்காக ஓட்டு போட்டது 3% பேர்.. வேலை வாய்ப்புக்காக 30% ஓட்டு- இந்தியா டுடே எக்சிட் போல்

Google Oneindia Tamil News

பாட்னா: பீகாரில் கிட்டத்தட்ட நிதிஷ்குமார் சகாப்தம் முடிவடைந்து விட்டதாகவே தெரிகிறது. பல்வேறு டிவி சேனல்கள் மற்றும் ஆய்வு அமைப்புகள் இணைந்து வெளியிட்ட எக்ஸிட் போல் முடிவுகள் அதைத்தான் அறுதியிட்டுக் கூறுகின்றன.

Recommended Video

    Bihar Exit polls ஒவ்வொன்றும் என்ன சொல்கிறது ? | Oneindia Tamil

    பீகாரில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்வைத்த 'துருவ அரசியல்' எடுபடவில்லை என்பதை இந்தியா டுடே கருத்துக்கணிப்பு தெளிவாக காட்டுகிறது.

    பொதுவாகவே மத விஷயங்களை முன்வைத்துதான் வாக்குகளை பாஜக கேட்கிறது என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது. ஆனால் பீகாரில் வளர்ச்சி வேண்டும் என்பதுதான் வாக்காளர்களின் கோரிக்கையாக இருந்துள்ளது.

    பீகாரில் ஆட்சியை இழக்கிறார் நிதிஷ்.. தனிப்பெரும் கட்சியாகிறது ராஷ்டிரிய ஜனதாதளம்- ஏபிபி எக்சிட் போல்பீகாரில் ஆட்சியை இழக்கிறார் நிதிஷ்.. தனிப்பெரும் கட்சியாகிறது ராஷ்டிரிய ஜனதாதளம்- ஏபிபி எக்சிட் போல்

    வளர்ச்சி வேண்டும்

    வளர்ச்சி வேண்டும்

    இந்தியா டுடே மற்றும் ஆக்ஸிஸ் போல் இணைந்து நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் இது தெளிவாக தெரியவந்துள்ளது.
    வளர்ச்சி என்பதற்காக வாக்களித்ததாக 42 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். வேலைவாய்ப்பு பிரச்சினைக்காக ஓட்டு போட்டதாக 30% பேர் தெரிவித்துள்ளனர். விலைவாசி ஏற்றம் தங்களது ஓட்டுப் போடும் விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியதாக 11 சதவீதம் பேர் கூறினர்.

    மோடிக்கு 3 சதவீதம்தான்

    மோடிக்கு 3 சதவீதம்தான்

    கட்சியை பார்த்து ஓட்டு போட்டதாக 3% பேர் மட்டும் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடிக்காக ஓட்டு போட்டதாக மூன்று சதவீதம் பேர் கூறியுள்ளனர். எனவே பீகாரில் மோடி அலை இல்லை என்றே தெரிகிறது. ஜாதி பார்த்து ஓட்டு போட்டதாக 1 சதவீதம் பேரும், தேசிய பாதுகாப்பு விஷயத்தை கருத்தில் கொண்டு 1 சதவீதம் பேரும், நிதிஷ்குமாருக்காக 1 சதவீதம் பேரும் ஓட்டு போட்டுள்ளனர்.

    அசல் பிரச்சினைகள்

    அசல் பிரச்சினைகள்

    ஆக மொத்தம்.. வளர்ச்சி, வேலைவாய்ப்பு போன்ற அசல் பிரச்சினைகளைதான் பீகார் வாக்காளர்கள் கவனத்தில் எடுத்து உள்ளனர் என்பதை இந்த கருத்துக் கணிப்பு தெளிவாகத் தெரிவிக்கிறது. இதன் காரணமாகத்தான் வேறு எந்த பிரச்சனையை பற்றியும் காதில் வாங்கிக் கொள்ளாமல் ஆளும் நிதிஷ்குமார் கூட்டணியை மீண்டும் அரியணை கொண்டு வந்து விடக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருந்துள்ளதாக பல்வேறு எக்சிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

     பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை

    பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை

    ஏனெனில் பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகளில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் கூட்டணிக்குத்தான் மக்கள் அதிக அளவுக்கு ஓட்டுப்போட்டு உள்ளதாகவும், அல்லது தொங்கு சட்டசபை அமையும் என்றும்தான் தெரிவிக்கப்பட்டுள்ளதே தவிர பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று எந்த ஒரு கருத்து கணிப்பும் தெரிவிக்கவில்லை.

    English summary
    In the Bihar election, people voted for development and unemployment not for Narendra Modi, says India Today exit poll results.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X