பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"மலை"யோடு மோதிய "மடு".. ஆட்டம் காணும் நிதீஷ் குமார் சாம்ராஜ்ஜியம்.. யார் இந்த தேஜஸ்வி!

ஆட்சியை பிடிப்பார் என்று கருதப்படும் தேஜஸ்வி யார்?

Google Oneindia Tamil News

பாட்னா: முதல்முறையாக ஒரு இளைஞர் பீகாரில் ஆட்சியை கைப்பற்ற போகிறார் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.. தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மெகா கூட்டணியே ஆட்சியமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான எதிர்பார்ப்பும் தற்போது எகிறி வருகிறது.

Recommended Video

    Tejashwi Yadav Biography in Tamil | Oneindia Tamil

    யார் இந்த தேஜஸ்வி?!

    முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் - ராப்ரி தேவி தம்பதியின் 2வது மகன்.. 1989 ஆண்டு பிறந்தவர்தான் தேஜஷ்வி.. லாலுவின் குழந்தைகள் எல்லாம் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள்.. ஆனால் தாய், தந்தையரோ அரசியல் நுணுக்கம் அறிந்தவர்கள்.. இருவருமே நாட்டை ஆண்டவர்கள். 1990 முதல் 2005 வரை லாலு தம்பதிதான் பீகாரை கட்டி இழுத்தனர்.. தனித்தனியாக முதலமைச்சர்களாக பதவி வகித்தனர்.

    ஆனால், தேஜஷ்விக்கு கிரிக்கெட் என்றால் உயிர்.. சின்ன வயசில் இருந்தே எல்லாமே கிரிக்கெட்தான்.. எப்பவுமே பேட்டும் கையுமாக சுற்றி கொண்டிருந்த தேஜேஸ்வி, மாநில அளவிலான கிரிக்கெட் அணியில் கலந்து கொண்டு விளையாடினார்.

    பீகாரில் ஆட்சியை தீர்மானிக்குமா இந்த 0.39% வாக்குகள்? தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரம்! பீகாரில் ஆட்சியை தீர்மானிக்குமா இந்த 0.39% வாக்குகள்? தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரம்!

    கிரிக்கெட்

    கிரிக்கெட்

    பிறகு அங்கிருந்து ஐபிஎல் டெல்லி அணியில் சேர்ந்தார்... 2008-2012 வரை டெல்லி அணியின் வீரராகவே இருந்தார்.. ஆனால், ஏனோ அவருக்கு விளையாட ஒருமுறைகூட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கு பிறகு, அதாவது 2015ல்தான் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்.

    வெற்றி

    வெற்றி

    2015-ம் ஆண்டு ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் ஜனதா தளம் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தபோது, அந்த தேர்தலிலேயே தேஜஸ்வியும் போட்டியிட்டார்.. ராகோபுர் என்ற தொகுதியில் நின்று, வெற்றியும் பெற்றார்.. நிதிஷ் குமார் அமைச்சரவையில் துணை முதல்வர் பொறுப்பும் வழங்கப்பட்டதையடுத்து, அதையும் திறன்பட செய்து முடித்தார்.. ஆனால், ஆர்ஜேடி - ஜனதா தள கூட்டணியில் முறிவு ஏற்படவும், நிதிஷ்குமார் பாஜக பக்கம் சாய்ந்துவிட்டார்.. அவர் அந்த பக்கம் சென்றுவிடவும், மொத்த பீகாரின் ஒரே எதிர்கட்சி தலைவராக தேஜஸ்வி உருவானார்.

    ஜெயில்

    ஜெயில்

    இந்த காலகட்டம் தேஜஸ்விக்கு மிகவும் சவாலானது.. லாலுவும் ஜெயிலில் உள்ளார்.. கடந்த ஆண்டு நடந்த எம்பி தேர்தலிலும் தோல்வி அடைந்துவிட்ட நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளம் என்ற மாபெரும் கட்சியை இளைஞர் தேஜஸ்விதான் வழிநடத்தி கொண்டு வந்து கொண்டிருக்கிறார்.. தலித் அரசியலில் முக்கிய சக்தியாகத் திகழ்ந்த ராம் விலாஸ் பஸ்வானும் இறந்துவிட்டார்.. கொரோனா பிரச்சனை, வெள்ள பாதிப்பு போன்றவை மாநில பிரச்சனைகளாக விஸ்வரூபமெடுத்த நிலையில், இந்த தேர்தலை துணிச்சலாக எதிர்கொண்டார்.

    சவால்

    சவால்

    மலை மாதிரி இருக்கும் பாஜக - நிதிஷ்குமாருடன் நேரடியாக மோதி உள்ளார்.. கடுமையான தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டும், வரவேற்கக்கூடிய தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டும் தேர்தலை சந்தித்தார்.. இன்று அந்த ரிசல்ட் வர உள்ளது.. எப்படியும் தேஜஸ்விதான் ஆட்சியை பிடிப்பார் என்று சொல்லப்படுகிறது.. அது நடக்குமா? தேஜஸ்வி முதல்வராவாரா? கட்சி செல்வாக்கை மீட்டெடுப்பாரா? என்பதெல்லாம் இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.

    English summary
    Tejashwi Yadav Biography in Tamil (யார் இந்த தேஜஸ்வி): Check Who is Tejashwi Yadav and his biography who belongs toRJD Party and Contesting aganist Nitish Kumar in Bihar Elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X