பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீனியர்கள் யாருமே இல்லை.. எல்லாம் புதுப் பசங்களா இருக்காங்க.. என்னாக போகுதோ பீகார் தேர்தல்!

இளம் வேட்பாளர்கள் அதிகமானோர் பீகார் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்

Google Oneindia Tamil News

பாட்னா: பிக் பாஸ் வீடு மாதிரி இருக்கிறது பீகார் தேர்தல் களம்.. ராம் விலாஸ் பாஸ்வான் இல்லை, லாலு பிரசாத் யாதவ் ஜெயிலில் இருக்கிறார். மற்ற சீனியர்களும் கூட ஆக்டிவாக இல்லை. ஆனால் இளம் தலைவர்கள்தான் அதிகம் நடமாடுகின்றனர். எனவே இளைஞர்களின் சக்தி எந்த அளவுக்கு பீகார் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது பீகார் தேர்தல் களம்... முதுபெரும் தலைவர்கள் பலர் ஆக்டிவாக இல்லாத நிலையில் தேர்தல் களத்தில் இளம் தலைவர்கள் கலக்க ஆரம்பித்துள்ளனர்.

ராம் விலாஸ் பாஸ்வான் இறந்து போய் விட்டார்.. லாலு பிரசாத் யாதவ் ஜெயிலில் இருக்கிறார். இவர்கள் இல்லாமல் தேர்தல் களம், களமாகவே இல்லை. நிதீஷ் குமாரும் பெரிய அளவில் எப்படி சோபிக்கப் போகிறார் என்று தெரியவில்லை. சரத் யாதவும் வயதாகி விட்டார்.

30 ஆண்டுகால லாக்டவுனுக்கு முடிவு... பீஹாரில் புதிய முழக்கம்.. முதல்வராக முடி சூட முனையும் புஷ்பம்..!30 ஆண்டுகால லாக்டவுனுக்கு முடிவு... பீஹாரில் புதிய முழக்கம்.. முதல்வராக முடி சூட முனையும் புஷ்பம்..!

பாஜக

பாஜக

இப்போது இளம் தலைவர்கள்தான் லீடிங்கில் உள்ளனர்.. ஒரு பக்கம் பாஸ்வான் மகன் சிராக் பாஸ்வான் இருக்கிறார். மறுபக்கம் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் இருக்கிறார். இருவருமே முதல்வர் வேட்பாளர்களாக தத்தமது கூட்டணிகளால் அறிவிக்கப்பட்டவர்கள். இருவருக்குமே 40 வயதுக்குள்தான். சிராக்குக்கு 37 வயதாகிறது.. தேஜஸ்விக்கு 30 வயதுதான்.

 ஜுனியர்கள்

ஜுனியர்கள்

இன்னொரு பக்கம் பிரியா செளத்ரி என்பவர் அலை பரப்பி வருகிறார். 28 வயதேயான இளம் பெண்ணான இவர் ப்ளூரஸ்ஸ் என்ற கட்சியை ஆரம்பித்து பீகாரை கலக்கிக் கொண்டிருக்கிறார். இதில் டாக்டர்கள், என்ஜீனியர்கள், சமூக சேவகர்கள், டீச்சர்கள் என அதகளம் செய்கின்றனர். விவசாயிகளுக்கும் இக்கட்சி முக்கியத்துவம் கொடுத்துள்ளது. அனைவருமே தங்களை பெருமை மிகு பிகாரிகள் என அடையாளப்படுத்திக் கொண்டு பிரச்சாரத்தில் கலக்கி வருகின்றனர்.

களம்

களம்

இதுதவிர விகாஷீல் இன்சான் என்ற கட்சியும் களத்தில் நிற்கிறது. இதன் தலைவர் சினிமா செட் டிசைனரான 35 வயதேயான முகேஷ் சஹானிதான். இக்கட்சியும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படி இளைஞர் பட்டாளம்தான் பீகார் மக்களின் டாக் ஆப் தி டங் ஆக மாறியுள்ளனர். இவர்கள்தான் பிரச்சாரத்திலும் முக்கியப் பங்காற்றுகின்றனர்.

 சுஷில் குமார்

சுஷில் குமார்

மறுபக்கம் திரும்பி பார்த்தால் பூராம் தாத்தாக்களாக உள்ளனர். நிதீஷ் குமாருக்கு 69 வயதாகிறது.. பாஜகவின் சுஷில் குமார் மோடிக்கு 68 வயதாகிறது... முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சிக்கு 76 வயதாகிறது. இவர்களின் அனுபவம் வெல்லுமா அல்லது இளைஞர் படையின் சுறுசுறுப்பான திட்டமிடல், தேர்தல் பணிகள் வெல்லுமா என்பது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியத்துவம்

முக்கியத்துவம்

மொத்தம் உள்ள 7.18 கோடி வாக்காளர்களில் இளைஞர்கள் எண்ணிக்கை அதாவது 18 முதல் 39 வயது வரையிலானோர் 3.66 கோடி ஆவர்... மேலும் 18 முதல் 25 வயதுக்குட்பட்டோர் எண்ணிக்கை 16 சதவீதமாகும். எனவே இளைஞர்களின் வாக்குகள் முக்கியத்துவம் வகிக்கின்றன... எனவேதான் இளைஞர்களை அதிக அளவில் கட்சிகள் நம்பி இருக்கின்றன.

 இளைஞர்கள்

இளைஞர்கள்

இன்னொரு பக்கம் ஜாதி இருக்கிறது. ஜாதி ரீதியாகவும் இளைஞர்கள் பட்டாளம் அணி திரளும் வாய்ப்புகள் உள்ளன. இருந்தாலும் மாநில அளவிலான இளம் தலைவர்களுக்கு ஜாதி பாரபட்சம் இல்லாமல் இளைஞர்கள் அணி திரண்டு வருவார்கள் என்ற ந ம்பிக்கை உள்ளது. இதை நம்பித்தான் சிராக்கும், தேஜஸ்வியும் களத்தில் தைரியமாக உள்ளனர்... இதே நம்பிக்கையில்தான் ப்ளூரல்ஸ் கட்சியும் களம் கண்டுள்ளது.

 இளம் தலைவர்கள்

இளம் தலைவர்கள்

மூத்த தலைவர்கள் பலரும் இல்லாத நிலையில் இளம் தலைவர்கள் எப்படி வெற்றி கொடி நாட்டப் போகிறார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியது. அதை விட முக்கியமாக இவர்களை சமாளித்து முதல்வர் நிதீஷ்குமார் மீண்டும் பதவிக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பும் பலமாகவே உள்ளது பீகாரில், அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 என 3 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. நவம்பர் 10ம் தேதி தீர்ப்பு தினமாகும், அதாவது வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

English summary
Will Youth power prevail over the seniors in Bihar election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X