பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகாரிகளின் முதுகில் அம்பால் குத்திட்டீங்க.. இனி லாந்தர் பிரகாசமா எரியும்.. நிதிஷ்க்கு லாலு பதிலடி

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் அவரது கட்சி சின்னம் ஆகியவற்றை சரமாரியாக விமர்சித்து சிறையிலிருந்தபடியே, லாலு பிரசாத் யாதவ் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தை ராஷ்ட்ரிய ஜனதா தளம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தான் செய்யும் தேர்தல் பிரச்சாரங்களில் எல்லாம், லாலுவையும் அவரது கட்சியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். லாலு கட்சியின் சின்னமான லாந்தர் விளக்கின் ஆயுள் எப்போதோ முடிந்து விட்டது. தற்போது பீகாரில் அனல் மின்நிலையங்கள் உள்ளன. எனவே இனி லாந்தர் விளக்குக்கெல்லாம் அவசியமில்லை என பேசினார்.

You stabbed the arrow on the back of Biharis.. Lalu was criticized Nitish Kumar

இதற்கு பதிலடி தரும் வகையில் தற்போது சிறையிலிருந்தபடியே லாலு பிரசாத் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியின் சின்னமான அம்பு, வன்முறையின் அடையாளமாக இருக்கிறது. ஆனால் எங்கள் கட்சியின் லாந்தர் விளக்கு சின்னம் இருளை நீக்கி வெளிச்சத்தை அளிக்க கூடியது.

எங்கள் சின்னம் ஏழைகளின் வாழ்க்கையில் வெளிச்சத்தை மலர வைக்கும். லாந்தர் விளக்கு சின்னம் அன்பையும், சகோதரத்துவத்தையும் உணர்த்துகிறது. உங்கள் சின்னமான அம்பை பயன்படுத்தி தாமரையில் துளையிடுவதா பாஜகவை எதிர்ப்பதா அல்லது தஞ்சமடைவதா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.

மோடி அல்லாத பாஜக அரசுக்கு திமுக ஆதரவு தரும்? பரபர சந்திப்புகள் சொல்வது என்ன? மோடி அல்லாத பாஜக அரசுக்கு திமுக ஆதரவு தரும்? பரபர சந்திப்புகள் சொல்வது என்ன?

பீகார் மக்களின் முதுகில் குத்த தான் நீங்கள் அம்பை பயன்படுத்தியுள்ளீர்கள் எனவே இனி எங்கள் லாந்தர் விளக்குமேலும் பிரகாசமாக எரியும் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் வன்முறையின் அடையாமாக திகழும் அம்புவின் ஆயுள் முடிந்து விட்டது. எவ்வளவோ நவீன ஏவுகணைகள் வந்துவிட்ட தற்காலத்தில், அம்புக்கெல்லாம் இங்கு வேலை இல்லை.

உங்கள் அம்பை கொண்டு போய் மியூசியத்தில் வைக்க வேண்டியது தான் என கடுமையாக சாடியுள்ளார். ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க குறுக்கு வழியில் செல்லும் உங்களுக்கு கொள்கை, கோட்பாடு என்று எதுவும் கிடையாது. ஆனால் நாங்கள் அப்படி அல்ல என லாலு கூறியுள்ளார்,

English summary
Lalu Prasad Yadav has written a letter Criticized to Bihar Chief Minister Nitish Kumar and his party and its symbol.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X