• search
பெரம்பலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

'டைனோசர்' முட்டை கிடைச்சாலும் கிடச்சது.. இந்த பெரம்பலூர்க்காரங்கள கையில பிடிக்க முடியல.. கலகல மீம்ஸ்

|

பெரம்பலூர்: அடேங்கப்பா.. டைனோசர் முட்டை மாதிரி, உருண்டையான முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் கண்டுபிடிச்சாங்க.. இந்த பெரம்பலூர்க்காரங்கள கையில பிடிக்க முடியல.

"மத்த ஊர்லல்லாம், ஆடு மாடுதான் வளர்ப்பீங்க.. நாங்க டைனோசரையே வளர்த்தவங்க தெரியும்ல"ன்னு, கெத்துக் காட்டி திரிகிறார்கள் பெரம்பலூரியன்ஸ்.

இந்த களேபரம், எல்லாத்துக்கும் காரணம், பெரம்பலூர் அருகே குன்னம் பெரிய ஏரியில் நேற்று மண் எடுத்து கொண்டிருந்தபோது, அம்மோனைட் எனப்படும், கடல்வாழ் நத்தைகளின் படிமங்களும் சிதைவுற்ற நிலையில் கிடைத்துதானாம்.

அந்த ஏரியில் டைனோசர் முட்டை போல் பெரிய உருண்டை வடிவிலான படிமங்கள் கிடைத்துள்ளன. இந்த டைனோசர் முட்டைகள் மாமிச கார்னோட்டாரஸ் (Carnotaurus) மற்றும் இலைகள் மட்டும் உண்ணும் சைவ, சவுரபோட் டைனோசரின் முட்டைகளாக இருக்கலாம் என கூறப்படுகிறது. என்ன ஜுராசிக் பார்க் படத்துல வர்ற சீன்லாம் ஞாபகம் வருதுல்ல. நமக்கே இப்படி கூஸ்பம்ப்பா இருக்குன்னா, பெரம்பலூரியன்சை கேக்கனுமா.. அய்யய்யய்யோ.. நியூச கேட்டதுல இருந்து அவுங்கள கைல பிடிக்க முடியல.

 டைனோசர் முட்டை

டைனோசர் முட்டை

டைனோசர் முட்டை இருந்தது என்றால், அங்கே டைனோசரஸ்கள் வாழ்ந்திருக்க வேண்டும். அப்போ பெரம்பலூர்க்காரர்கள் எப்படியெல்லாம் அவுங்க மனசுக்குள்ள சம்பவத்தை ஓட்டிப் பார்ப்பாங்கன்னு கற்பனை குதிரையை தட்டிவிட்டிருக்கிறார்கள் நம்ம மீம்ஸ் கிரியேட்டர்கள். இப்போ சோஷியல் மீடியா முழுக்க அந்த மீம்ஸ்தான் ஓடிக் கொண்டு இருக்கிறது.

 எங்களுக்கு ஆட்டுக்குட்டி மாதிரி

எங்களுக்கு ஆட்டுக்குட்டி மாதிரி

சூனா பானா, ஆட்டுக் குட்டியை தோளில் தூக்கிப் போட்டு சுத்துன மாதிரி, பெரம்பலூர் பசங்க டைனோசரை தூக்கிப் போட்டு சுத்துறவங்க.. அப்படீன்னு லந்து பண்ணுது இந்த மீம். கனவா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாப்பா!

 ஜுராசிக் பார்க்கில் இன்று சுகமான ஜோடிகள்..

ஜுராசிக் பார்க்கில் இன்று சுகமான ஜோடிகள்..

பெரம்பலூர் மாவட்டம் உங்களை அன்போடு வரவேற்கிறதுங்கிற போர்டுல்லாம் பழசு. பெரம்பலூர் ஜுராசிக் பார்க் அப்படீன்னு போர்டு மாட்டி, அடுத்த மாவட்டத்துக்காறங்கள தெறிக்க விடுறதுதான் இப்போ புதுசு பாஸ்.

 வளர்க்க டைனோசர் இருக்கு.. வேறென்ன?

வளர்க்க டைனோசர் இருக்கு.. வேறென்ன?

ஆரோக்கியா பால் விளம்பரத்தில் வர்ற அம்மா, மாட்டுக்கு பதிலா, டைனோசரை வச்சி பேசுனா எப்படி இருக்கும்னு பாருங்க மக்களே.. டெடரா இருக்குல்ல. இருக்கனும்.

 இந்த டைனோசர கட்டிப்போடுப்பா

இந்த டைனோசர கட்டிப்போடுப்பா

வருத்தப்படாத வாலிபர் சங்கத்துல, மாட்டைதான் பெரியப்பா தோட்டத்துல கட்டச் சொல்ற மாதிரி சீன் வரும். ஆனா பெரம்பலூர்ல டைனோசரைத்தான் இப்படி கழுத்துல கயிறு போட்டு கட்டி இழுத்துட்டு போயிருப்பாங்கல்லன்னு, கன்னா பின்னா கற்பனையை சிதற விடுகிறது இந்த மீம்.

 எம்மாம் பெரிய ஆம்ப்ளெட்

எம்மாம் பெரிய ஆம்ப்ளெட்

டேடி சமையல் வீடியோ பார்த்திருப்பீங்க. அதே மாதிரி அந்த காலத்துல டைனோசர் முட்டையை வச்சிதானே பெரம்பலூர்ல ஆம்ப்ளெட் போட்டிருப்பாங்கன்னு எக்குத் தப்பா யோசிக்குது இந்த மீம். அட இருங்கப்பா.. ஆராய்ச்சி பண்ணி, அது டைனோசர் முட்டைதானான்னு உறுதி செய்யட்டும். அவசரப்பட்டு அலப்பறை பண்ணி, அப்புறம், அது ஏதோ பெரிய சைசு வாத்து முட்டைன்னு சொல்லிட்டா, வம்பா போயிரும்!!

English summary
Dinosaur eggs Tamil memes: After Dinosaur eggs like thing found in Perambalur district memes going viral on Jurassic park.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X