பெரம்பலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏகப்பட்ட விதி மீறல்... தூத்துக்குடி தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல் வரும்... தமிழிசை ஆரூடம்

Google Oneindia Tamil News

பெரம்பலூர்: தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரலாம் என்று பா ஜ க மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பா.ஜ கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான மேற்பார்வையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்தது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன்,

By - election may Come to Tuticorin constituency, Tamilisai predicted

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியில் நிலவும் குழப்பத்துக்கு காரணம், அக்கட்சியின் தலைவரான ராகுல் காந்தி தான் என்றார். காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததால் அவர் தலைமை மீது நம்பிக்கை இழந்து, அக்கட்சியினர் கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். இதில், பா ஜ கவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் விளக்கமளித்தார்.

ஒரு நாள் கூட ராஜகோபால் ஜெயிலுக்குள் இருக்க மாட்டேங்குறாரே ராஜகோபால்?! ஒரு நாள் கூட ராஜகோபால் ஜெயிலுக்குள் இருக்க மாட்டேங்குறாரே ராஜகோபால்?!

மேலும், பேசிய அவர், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும். அத்தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி வேட்புமனுவில், தனது கணவர், மகன் ஆகியோரது வருவாய், வசிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்களை மறைத்துள்ளார் என்று குற்றம்சாட்டினார்.

தேர்தல் நடத்தை விதி மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டு குறித்தும் நான் வழக்கு தொடர்ந்துள்ளேன். அதே நேரம், 2 ஜி வழக்கும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இரு வழக்குகளின் விசாரணையின் முடிவில் தூத்துக்குடி தொகுதிக்கு இடைத்தேர்தல் வரலாம் என்று கணிப்பு தெரிவித்தார்.

English summary
BJP state president Tamilisai Soundararajan said that By - election may Come to Tuticorin constituency
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X