• search
பெரம்பலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

டைனோசர் முட்டை.. நடுகாட்டில் வீசப்பட்ட கொரோனா நோயாளிகள் உடல்.. 2020ல் பெரம்பலூர் டாப் 10

|

பெரம்பலூர் : 2021 புதுவருடம் வர பிறக்க உள்ள நிலையில் 2020 ஆம் ஆண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளின் தொகுப்புகளை பார்க்கலாம்.

முதல் இடத்தில் பஞ்சாயத்துத் தலைவராக வெற்றி பெற்ற மறு நாளே மாரடைப்பால் மரணம் அடைந்த நபர் உள்ளார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்ற மணிவேல் என்ற முதியவர் வெற்றிச் சான்றிதழை பெற்ற மறுநாளே இறந்த சம்பவம் ஆதனூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

 flashback 2020 : perambalur top 10 news on 2020

ஊரடங்கு காவலுக்கு போன போலீஸ்காரர் மரணமடைந்த சம்பவம் 2ஆம் இடத்தில் உள்ளது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள பகுதியை சேர்ந்த பிரவிஸ் என்ற போலீஸ்காரர் ஊரடங்கு காவல் பணியை மேற்கொள்ள பைக்கில் சென்ற போது விபத்து ஏற்பட்டு ரோட்டோரம் இருந்த கரண்ட் கம்பத்தில் பயங்கரமாக மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

அம்மாவை அடக்கம் செய்த அரைமணி நேரத்தில்... சமூக நலப்பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர் 3ஆம் இடத்தில் உள்ளார். பெரம்பலூர் வி.களத்தூரில் தூய்மைப் பணியாளர் அய்யாதுரை என்பவர் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் அவரது தாயார் அங்கம்மாள் வயது மூப்பு காரணமாக காலமானார். இதையடுத்து தனது தாயார் இறந்த தகவலை உறவினர்களுக்கு தெரிவித்த அய்யாதுரை, யாரும் இப்போது உள்ள சூழலில் நேரில் வரவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதுடன் விரைந்து தனது அம்மாவின் உடலை நல்லடக்கம் செய்தார். அம்மா இறந்திருப்பதால் அய்யாதுரை பணிக்கு திரும்ப குறைந்தது ஒரு வாரம் ஆகும் என நகராட்சி அதிகாரிகள் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் நினைத்திருந்த நிலையில் உடனடியாக பணிக்கு திரும்பி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார் தனது தாயாரை இழந்த பெரம்பலூர் தூய்மைப் பணியாளர் திரு.அய்யாதுரை அவர்கள், தாயை இழந்த சோகம் மறையும் முன்னரே, இறுதிச் சடங்கு முடிந்ததும் வந்து கொரோனா பணியில் ஈடுபட்டது நெகிழ்ச்சி அளிக்கிறது. மக்களை காக்க வேண்டும் என்ற அவரது உயர்ந்த எண்ணத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும் தலை வணங்குகிறேன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பாராட்டுக்களை டிவிட்டரில் தெரிவித்திருந்தார்
.

கர்ப்பிணி மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி, கலெக்டர் ஆபீசில் ரகலை செய்த நபர் 4ஆம் இடத்தில் உள்ளார்.. பெரம்பலூர் மாவட்டம் சிருகன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் உடன் பணியாற்றிய பிரசன்னா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துக்கொண்டார். இருவரும் வேறு வேறு சாதி என்பதால் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்த நிலையில் கர்பமான பிரசன்னா தாய் வீட்டுக்கு செல்ல தன்னை மனைவிடம் பேச அனுமதிக்க மருக்கிறார்கள் என சொல்லி கணவர் மணிகண்டன் கர்ப்பிணி மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி, கலெக்டர் ஆபீசில் ரகலை செய்தார். பின்னர் அவரை போலீசார் சமாதானம் படுத்தி அனுப்பி வைத்தனர்.
.

பாரிவேந்தர் ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸ்.. சடலத்தை நடுக் காட்டில் வீசியதாக பரவிய செய்தி விவகாரம் 5ஆம் இடத்தில் உள்ளது இருங்கலூர் பகுதியில் எஸ்ஆர்எம் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியும் செயல்பட்டு வருகிறது இங்கு மரணமடைந்த கொரோனா நோயாளியை கொட்டாம்பட்டி காட்டுக்கு ஆம்புலன்சில் கொண்டு வந்து புதர் பகுதியில் மருத்துவமனை ஊழியர்கள் தூக்கி வீசி சென்றதாக தகவல்கள் பரவியது.. இது தொடர்பாக வீடியோக வெளியாக மருத்துவமனையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கிணற்றில் தவறி விழுந்தவர் மற்றும் அவரை காப்பாற்ற முயன்ற தீயணைப்பு வீரர் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் 6ஆம் இடத்தில் உள்ளது.
பெரம்பலூர் அருகே செல்லியம்பாளையம் கிராமத்தில் மனோகரன் என்பவருக்கு சொந்தமான வயலில் உள்ள கிணற்றில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அவ்வழியே சென்ற செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் ராதாகிருஷ்ணன் என்ற வாலிபர் எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார். அவரை காப்பாற்ற வந்த தீயனைப்பு வீரர்கள் 4பேர் கிணற்றில் இறங்க அவர்களும் மயங்கினர் உடனடியாக ஐவரும் மீட்க்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தீயணைப்புப் படை வீரர் ராஜ்குமார் ,மற்றும் கிணற்றில் தவறி விழுந்த ராதாகிருஷ்ணன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
.

வீட்டுக்குள்ளேயே தந்தைக்கு சமாதி கட்டிய மகன் 7ஆம் இடத்தில் உள்ளார். பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் அருகே களரம்பட்டி கிராமத்தில் கிழக்கு தெருவைச் சேர்ந்த ராமசாமி என்பவர் மரணமடைய அவரது கடைசி ஆசைப்படி மகன் பாலகிருஷ்ணன் வீட்டுக்குள்ளேயே தந்தைக்கு சமாதி கட்டி அடக்கம் செய்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆன்லைன் வகுப்பில் மாணவர்கள் கலந்துக்கொள்ள மொபைல் வாங்கி தந்த ஆசிரியர் 8ஆம் இடத்தில் உள்ளார். பெரம்பலூர் அருகே எளம்பலூரில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு ஆங்கில வழியில் 16 மாணவர்கள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் கிராமத்தில் வசிக்கும் ஏழை மாணவர்கள்.இவர்கள் ஆன்லைனில் பாடம் படிக்க ஏதுவாக பைரவி என்ற டீச்சர் ரூ 1 லட்சம் மதிப்பிலான 16 செல்போன்களை வாங்கிக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நாயை வெளிய தூக்கிட்டு போங்கப்பா" என்று பொது மேடையில், தன் கட்சி தொண்டரை எம்பி ராசா திட்டிய வீடியோ 9ஆம் இடத்தில் உள்ளது. பெரம்பலூரிலும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நடந்த ஆர்பாட்டத்தில் பேசிய எம்பி ஆ ராசா பேச ஆரம்பித்ததுமே கீழே ஒரு தொண்டர் 'ராசா வாழ்க வாழ்க' என்று கோஷமிட்டார். இது பேசி கொண்டிருந்த ராசாவுக்கு இடைஞ்சலாகவும் இருந்தது.. ஒரு கட்டத்தில் டென்ஷன் அடைந்துவிட்ட ராசா, "ஏய்.. யார்ரா அவன்.. அந்த நாயை வெளிய தூக்கிட்டு போங்கப்பா" என்று சொன்னார். பொது மேடையிலேயே தன் கட்சி தொண்டரையே எம்பி ஒருவர் "நாயே" என்று திட்டிய வீடியோ, தற்போது, சோஷியல் மீடியாவில் வைரலானது.

பெரம்பலூர் பக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது டைனோசர் முட்டை இல்லை என்பது 10 ஆம் இடத்தில் உள்ளது. பெரம்பலூர் அருகே குன்னம் பெரிய ஏரியில் மண் எடுத்து கொண்டிருந்தபோது முட்டைகள் கண்டுப்பிடிக்கப்பட்டது . இவற்றை டைனோசர் முட்டைகள் மாமிச கார்னோட்டாரஸ் (Carnotaurus) மற்றும் இலைகள் மட்டும் உண்ணும் சைவ, சவுரபோட் டைனோசரின் முட்டைகளாக இருக்கலாம் என கூறப்பட்டது. இது தொடபாக அரியலூர் மாவட்ட புதைஉயிரி அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர் நடத்திய ஆய்வில் குன்னம் ஏரியில் குடிமராமத்து பணியின்போது கண்டறியப்பட்ட உருண்டைகள் எதுவும் டைனோசர் முட்டைகள் கிடையாது. அம்மோனைட் எனப்படும், கடல்வாழ் நத்தைகளின் படிமங்கள் என்று டைனோசர் முட்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

இது தான் மக்களே 2020 ஆம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் . நீங்களும் பெரம்பலூரில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை கமெண்ட் செய்யுங்கள்.

English summary
With the New Year 2021 looming, various interesting events have taken place in the Perambalur district in 2020. Check out their details in the news
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X