பெரம்பலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பகவத் கீதையை விமர்சிப்பது போல.. குரான், பைபிளையும் விவாதியுங்களேன்.. எச். ராஜா

குரான், பைபிள் பற்றியும் விவாதம் நடத்தலாமே என்று எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    அண்ணா பல்கலை.யில் பகவத் கீதை விவகாரம்: எச். ராஜா ட்வீட் -வீடியோ

    பெரம்பலூர்: "பகவத் கீதை குறித்து விவாதங்கள் நடத்துகிறார்களே.. இப்படி குரான், பைபிள் குறித்தும் விவாதங்களை ஊடகங்கள் நடத்த முன்வருமா" என்று எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.

    காஷ்மீர் விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் டெல்லியில் போராட்டம் செய்தனர். பாகிஸ்தான் ரேடியோ வரை திமுக போராட்டம் பேசப்பட்டது. நேற்று கூட சீமானும் டெல்லியில் போராட்டம் நடத்தினார்.

    H Raja slams on media over Bhagavad gitas debate

    ஆனால் காஷ்மீர் விவகாரத்துக்கு நாட்டில் எங்குமே போராட்டம் நடக்கவே இல்லை, எல்லாரும் அமைதியாகதான் இருந்தனர்" என்று எச்.ராஜா சொல்லி உள்ளார்.

    பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது, காஷ்மீர் விவகாரம் முதல் மொழி திணிப்பு விவகாரம் வரை பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    "காஷ்மீர் மாநிலத்துக்கு 370-வது சட்டப்பிரிவு நீக்கம் குறித்து மத்திய அரசு அறிவிப்பு செய்ததும் நாட்டில் எங்கேயுமே போராட்டம் நடக்கவில்லை. அனைத்துக்கட்சியினரும் ஆதரவு அளித்தனர். எல்லாருமே அமைதியாக இருந்தனர். தமிழ்நாட்டில் மட்டும்தான் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தை நடத்தியவர்கள் யார் என்றால், பிரிவினைவாதிகள்.

    உன் வீட்டுக்கு நான் வரணும்னா.. ரூ. 3500 கொடு... ராமக்காவின் அக்கப் போர்.. வெலவெலத்த வேலூர்உன் வீட்டுக்கு நான் வரணும்னா.. ரூ. 3500 கொடு... ராமக்காவின் அக்கப் போர்.. வெலவெலத்த வேலூர்

    இந்த காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து அறிவிப்பினால், அம்மாநிலத்தைச் சேர்ந்த பட்டியல் இன மக்களுக்கு இனி இட ஒதுக்கீடு மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆனால் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து அறிவிப்பை எதிர்ப்பதன் மூலம் பட்டியல் இனத்தவருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறார்கள். திமுகவுக்கு சமூகநீதி என்பது கொள்கையல்ல. வெறும் ஓட்டு வாங்கும் தந்திரம்தான்.

    பகவத் கீதை குறித்து விவாதங்கள் நடத்த ஊடகங்கள் எப்படி அனுமதிக்கின்றன? இதை நான் கண்டிக்கிறேன். இப்படி பகவத் கீதை பத்தி விவாதங்கள் நடத்தும் இதே ஊடகங்கள் குரான், பைபிள் குறித்தும் விவாதங்கள் நடத்த முன்வருமா? தமிழ்நாட்டில் இருக்கிற ஊடகங்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக திட்டமிட்டு வதந்திகளை பரப்பி வருகின்றன. இதை நான் வெளிப்படையாகவே சொல்றேன். இதை ஊடகங்கள் மாற்றி கொள்ள வேண்டும்.

    English summary
    BJP National Secretary H Raja has critized DMK over Kashmir issue and also slams Media
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X