• search
பெரம்பலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

வேற வேற சாதி.. கிட்ட வந்தீங்கன்னா கொளுத்திப்பேன்.. என்னன்னு சொல்லுப்பா.. பரபரப்பை கிளப்பிய மணிகண்டன்

|

பெரம்பலூர்: "தள்ளி நில்லுங்க.. அப்பதான் சொல்லுவேன்.. கிட்ட வந்தீங்கன்னா கொளுத்திப்பேன்" என்று இளைஞர் ஒருவர் தன் கர்ப்பிணி மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி, கலெக்டர் ஆபீசில் செய்த ரகளையால் பரபரப்பாகி விட்டது!!

  கட்டுப்பாட்டு மண்டலங்களில் நடமாடும் ஏடிஎம்.. அருமையான யோசனை - வீடியோ

  பெரம்பலூர் மாவட்டம் சிருகன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்.. 24 வயதாகிறது.. என்ஜினியரிங் படித்துள்ளார்.. சென்னையில் தங்கி வேலை செய்து வருகிறார்.

  அப்போது உடன் பணியாற்றிய பிரசன்னா என்ற பெண்ணை காதலித்தார்.. இவரும் பெரம்பலூர் மாவட்டம்தான்.. சாத்தனூர் கிராமத்தை சார்ந்தவர்.. வயது 21 ஆகிறது.. இருவரும் வேறு வேறு சமூகம் என கூறப்படுகிறது.

  இதனால் வீட்டில் எப்படியும் கல்யாணம் செய்து வைக்க மாட்டார்கள் என்பதால், கடந்த மார்ச் மாதம் வீட்டுக்கு தெரியாமல் கல்யாணம் செய்து கொண்டனர்.

  டாஸ்மாக் விவகாரம்- ரஜினியின் மவுனத்தை கலைத்தது கமல்ஹாசனின் மநீமவின் அடுத்தடுத்த பல்க் ஸ்கோர்

  மனைவி

  மனைவி

  இந்நிலையில் பிரசன்னாவை அவரது பெற்றோர் தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்று விட்டதாக தெரிகிறது.. மணிகண்டனை போனில் பேச கூட அனுமதிப்பதில்லையாம்.. அதனால் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ் அலுவலகம் முன்பு திடீரென பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

  பெட்ரோல்

  பெட்ரோல்

  இதை பார்த்து அங்கிருந்த ஆண்,பெண் பாதுகாப்பு போலீசார் அலறி அடித்து கொண்டு வந்தனர்.. அவர் கையில் இருந்த தீப்பெட்டியை கீழே தட்டிவிட்டனர்.. "என்னன்னு சொல்லுப்பா? ஏன் இப்படி பண்றே?" என்று கேட்டபடியே அருகில் சென்றனர்.. யாராவது கிட்ட வந்தீங்கன்னா கொளுத்திப்பேன் என்று மீண்டும் இன்னொரு தீப்பெட்டியை பாக்கெட்டில் இருந்து எடுத்தார் இளைஞர்.

  லவ் மேரேஜ்

  லவ் மேரேஜ்

  "தள்ளி நில்லுங்க.. அப்பதான் சொல்லுவேன்.. நான் லவ் மேரேஜ் பண்ணிட்டேன்.. இன்டர்கேஸ்ட் மேரேஜ்.. பொண்ணு இப்போ 6 மாசம் கர்ப்பமா இருக்கு.. பொண்ணை அவங்க அப்பா, அம்மா வீட்டில கூட்டிட்டு போயிட்டாங்க.. ஆனா திரும்பவும் அனுப்பல.. போனில்கூட பேச விடல.. திரும்பி அவள் வரணும்" என்று சொல்லி கொண்டே திரும்பவும் தீ வைத்து கொள்ள முயன்றார்.

  சமாதானம்

  சமாதானம்

  அவரை தடுத்த போலீசார், "ஏம்பா.. பொண்டாட்டி வரலேன்னு இப்படியா பண்ணுவே? எல்லாரும் முட்டா பயலா? படிச்சிருக்கே, வேலை பார்க்கிறே, கல்யாணம் பண்ணியிருக்கே, இப்படியா பண்ணுவே? அதுக்கு பெட்ரோலை ஊத்திக்கிறதா.. ஸ்டேஷன் இருக்கு, ஒரு புகார் தரலாம் இல்லை? நேரம் காலம் சரியில்லாம இருக்கும், அதனால் வர்றப்போ வந்திட்டு போறாங்க.. எத்தனையோ இருக்கு.. 10 வருஷம் லவ் பண்றேன்னு சொல்றே? அந்த பொண்ணை சமாதானப்படுத்தி கூட்டிட்டு வர திறமை இல்லையா உனக்கு" என்று அறிவுறுத்தி அவரை சமாதானப்படுத்தினர்..

   
   
   
  English summary
  lockdown crime: husband committed suicide in perambalur
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X