பெரம்பலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஊரடங்கு காவலுக்கு போன போலீஸ்காரர்.. கரண்ட் கம்பத்தில் பைக் மோதி.. பெரம்பலூரில் பரிதாபம்!

டியூட்டிக்கு சென்று கொண்டிருந்த போலீஸ்காரர் விபத்தில் உயிரிழந்தார்

Google Oneindia Tamil News

பெரம்பலூர்: ஊரடங்கு காவலுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்த போலீஸ்காரர் சாலை விபத்தில் சிக்கியதுடன், கரண்ட் கம்பத்தில் மோதி.. தலை சிதறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது நாடு முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ளது.. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

lockdown: policeman died in road accident near perambalur

அதேசமயம் போலீசாரும் பொதுமக்கள் வெளிநடமாட்டம் இருந்தால் அவர்களை எச்சரித்து வருகின்றனர்.. இதனால் இவர்களது சேவை அளப்பரியதாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு காவல் பணியை மேற்கொள்ள பிரவிஸ் என்ற போலீஸ்காரரும் ஈடுபட்டார்.. இவர் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர்.. தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலாம் அணி திருச்சி 'ஏ' நிறுமத்தில் வேலை பார்த்து வருகிறார்.. வழக்கம்போல் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள இன்று காலையில் பைக்கில் கிளம்பி சென்றார்.

அப்போது எதிரே வேகமாக வந்த வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக பிரவிஸ் மீது மோதியது.. இதில் நிலைதடுமாறி பைக்குடன் ரோட்டோரம் இருந்த கரண்ட் கம்பத்தில் பயங்கரமாக மோதிவிட்டார் பிரவிஸ்.. அப்போது கரண்ட் கம்பத்தில் அவரது தலை மோதி சிதறியது.. ரத்த வெள்ளத்தில் அங்கேயே உயிரிழந்தார் பிரவிஸ்.

பொதுமக்கள் கண்முன்னாடியே காலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. இதை பார்த்து அலறிய மக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.. போலீசார் விரைந்து வந்து பிரவிஸ் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.

Recommended Video

    தமிழகத்தில் முதல் பலி... பரபரப்பு பின்னனி!

    எதிரே வந்த வாகனம் என்ன, டிரைவர் யார், விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்த விசாரணை நடக்கிறது. டியூட்டிக்கு சென்று கொண்டிருந்த போலீஸ்காரர் கரண்ட் கம்பத்தில் மோதி தலைசிதறி இறந்தது சக காவலர்களிடையே அதிர்ச்சியை தந்துள்ளது.

    English summary
    lockdown: policeman died in road accident near perambalur
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X