பெரம்பலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போச்சே.. 20 நிமிடம் லேட்டாக வந்த மநீம வேட்பாளர்.. பெரம்பலூரில் வேட்புமனுவை தாக்கல் செய்யாத செந்தில்

லோக்சபா தேர்தலில் பெரம்பலூர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் செந்தில்குமார் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

Google Oneindia Tamil News

Recommended Video

    லேட்டாக வந்த மநீம வேட்பாளர் செந்தில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியவில்லை- வீடியோ

    பெரம்பலூர்: லோக்சபா தேர்தலில் போட்டியிட இருக்கும் பெரம்பலூர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் செந்தில்குமார் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. வேட்புமனு தாக்கல் செய்ய தாமதமாக வந்த காரணத்தால் இவரால் வேட்புமனுவை தாக்கல் செய்ய முடியவில்லை.

    லோக்சபா தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. லோக்சபா தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது.

    லோக்சபா தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் இரண்டிலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுகிறது. இதற்கான முழு வேட்பாளர் பட்டியல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியானது. இதையடுத்து மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் வரிசையாக தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வந்தனர்.

    நல்லவனா இருக்கலாம்.. ரொம்ப நல்லவனா இருக்கக் கூடாது.. ஆனா நீங்க பயங்கர நல்லவனா இருக்கீங்களே மோகன்! நல்லவனா இருக்கலாம்.. ரொம்ப நல்லவனா இருக்கக் கூடாது.. ஆனா நீங்க பயங்கர நல்லவனா இருக்கீங்களே மோகன்!

    இன்று முடிந்தது

    இன்று முடிந்தது

    இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு அடைந்து இருக்கிறது. கடந்த வாரம் தமிழகத்தில் தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்று மதியம் 3 மணியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து டோக்கன் வழங்கப்பட்ட நபர்களுக்கு மட்டும் வேட்புமனு தாக்கல் செய்ய தற்போது அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    செந்தில்குமார்

    செந்தில்குமார்

    இந்த நிலையில் பெரம்பலூர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் செந்தில்குமார் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று காலதாமதமாக வந்தார். இவர் 3.20க்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்து இருக்கிறார். இவரது விண்ணப்பம் இவருக்கு முன்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் 3.10க்கு டோக்கன் வாங்குவதற்காக அளிக்கப்பட்டு இருக்கிறது.

    அனுமதி இல்லை

    அனுமதி இல்லை

    இவர் தாமதமாக வந்த காரணத்தால் இவரை போலீசார் அலுவலகத்திற்கு உள்ளே அனுமதிக்கவில்லை. அதேபோல் இவரது விண்ணப்பத்தையும் திருப்பி அளித்து இருக்கிறார்கள். விண்ணப்பமும் தாமதமாகத்தான் அளிக்கப்பட்டது என்று கூறி, அதை ஏற்க அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

    வாக்குவாதம் நடைபெறுகிறது

    வாக்குவாதம் நடைபெறுகிறது

    இதனால் அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளுடன் பெரம்பலூர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் செந்தில்குமார் வாக்குவாதம் செய்தார். தொடர்ந்து தற்போதும் செந்தில்குமார் வாக்குவாதம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பெரம்பலூரில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது .

    English summary
    Makkal Needhi Maiam candidate came late to file nominations: Can't contest in Perampalur Lok Sabha Seat.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X