பெரம்பலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எச்.ராஜா தமிழரா? கிறிஸ்தவர், இஸ்லாமியரை தாய்மதம் திரும்ப சொன்னேனா? நான் மதம் பரப்புபவன் அல்ல-சீமான்

Google Oneindia Tamil News

பெரம்பலூர்: பீகாரில் இருந்து தமிழகம் வந்த பாஜக மூத்த தலைவர் எச். ராஜா ஒரு தமிழரா? கிறிஸ்தவர், இஸ்லாமியர் அனைவரும் தாய் மதம் திரும்ப வேண்டும் என்று தாம் ஒருபோதும் பேசவில்லை.. பேசாததை பேசியதாக சொல்கின்றனர் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

    கிருஸ்தவர்கள், முஸ்லிம்களை இந்து மதத்திற்கு அழைத்தாரா சீமான்? என்ன பேசினார்? முழு வீடியோ

    சென்னையில் சில நாட்களுக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சீமா,. என் மதம் சைவம். என் மதம் மாலியம் (வைணவம்). நாங்கள் இந்துக்கள் அல்ல. கிறிஸ்தவம் ஐரோப்பிய மதம்; இஸ்லாம் அரேபிய மதம்.. மரச்செக்குக்கு திரும்பியதை போல, கருப்பட்டிக்கு திரும்பியதைப் போல அனைவரும் திரும்புங்க என்று கூறினார்.

    சீமானின் இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சீமான் தமிழர்கள் இந்துக்கள் அல்ல.. அனைவரும் சைவம், மாலியத்துக்கு திரும்புவங்க என்று கூறியிருந்தாலும், கிறிஸ்தவர், இஸ்லாமியரும் தாய்மதம் திரும்ப வேண்டும் என்ற வேண்டுகோளாக அது புரிந்து கொள்ளப்பட்டது. சீமானின் இந்த பேச்சு இந்துத்துவவாதிகளின் குரலாக இருப்பதாகவும் விமர்சிக்கப்பட்டது.

    சீமான் கட்சியில் ஆர்எஸ்எஸ் ஊடுருவல்- 'தமிழர்' சர்ட்டிஃபிகேட் தர நீங்க யார்? இயக்குநர் அமீர் தாக்கு சீமான் கட்சியில் ஆர்எஸ்எஸ் ஊடுருவல்- 'தமிழர்' சர்ட்டிஃபிகேட் தர நீங்க யார்? இயக்குநர் அமீர் தாக்கு

    நான் மதம் பரப்ப வந்தவன் அல்ல

    நான் மதம் பரப்ப வந்தவன் அல்ல

    இதனையடுத்து பெரம்பலூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இது தொடர்பாக சீமான் விளக்கம் அளித்து பேசியதாவது: நான் மதம் பரப்ப வந்தவன் அல்ல. நான் ஜி.யு.போப்பா? என்ன இதுவேடிக்கையாக இருக்குது .. நான் மதம் பரப்ப வந்தவன் இல்லை ராஜா... இனம் பரப்ப வந்தவன். நான் என் மொழி, இனம் அதில் உறுதியாக இருப்பேன். என் வரலாறு, கோட்பாடு அதில் உறுதியாக இருப்பேன்.

    பீகார் எச்.ராஜா தமிழரா?

    பீகார் எச்.ராஜா தமிழரா?

    எச்.ராஜா வந்து இந்துக்கள் எல்லாம் தமிழர்கள்; தமிழர்கள் எல்லாம் இந்துதான்... அப்படின்னு பேசுறதை இங்க யாருமே எதிர்க்கலை.... யாருமே எதிர்க்கலையே.. அதற்கு எதிர்வினையாக தமிழர்கள் நாங்கள் இந்துக்கள் இல்லை என்று சொன்னேன். நாங்கள் சைவர்கள்; என்னுடைய சமயம் சைவ சமயம். என்னுடைய சமயம் சிவசமயம். என்னுடைய சமயம் மாலியம். திருமாலை வழிபடுகிற கண்ணனை வழிபடுகிற மாலியம். அதை வைணவம் என்கிறீர்கள்.. நாங்கள் தூய தமிழில் மாலியம் என்கிறோம். எச். ராஜா, தமிழர் எல்லாம் இந்து, இந்து எல்லாம் தமிழர் என்றால் பீகாரில் இருக்கிறவன் எல்லாம்? குஜராத்தில் இருக்கிறவன் எல்லாம் தமிழராகிவிடுவானா? எச்.ராஜா தமிழராகிவிடுவாரா? எச். ராஜா பீகாரில் இருந்து இங்க வந்து தமிழராகிவிடுவாரா? எப்படி இருக்குது? அதை ஒருத்தரும் எதிர்த்து பேசறது கிடையாது.

    தாய் மதம் திரும்புதல் பேச்சுக்கு மறுப்பு

    தாய் மதம் திரும்புதல் பேச்சுக்கு மறுப்பு

    தாய் மதம் திரும்பச் சொல்லிட்டாரு... அப்படி நான் சொல்லவே இல்லையே.. நான் அப்படி சொல்லவே இல்லை. நான் ஒன்னு பேச இவங்க ஒன்னு பேசிகிட்டு இருப்பாங்க... பல பேரு என் எச்சில் இருந்துதான் கட்சியையே நடத்திகிட்டு திரியறான்... ஒருவேளை கிடையாது. அவ்வளவு பெரிய பனைச் சந்தை நடத்தி அவ்வளவு பெரிய திருவிழாவை நடத்தி அவ்வளவு பெரிய செய்திகளை சொல்றோம். அதைவிட்டு இதை பிடிச்சுகிட்டு சுத்திகிட்டு எல்லோரும் பேசுறது. பேசுங்க... பேசுங்க..

    பாஜக, ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு

    2010-ல் கட்சி ஆரம்பிக்கும்போது சொன்னேன், இனி நாம் தமிழர் வாழ்க- நாம் தமிழர் ஒழிக இதுதான் இனி தமிழ்நாட்டில்.. கொள்கை கோட்பாடு எதுவும் இல்லை.. நம்மை திட்டுவதுதான்.. சும்மா பிஜேபி, ஆர்.எஸ்.எஸ்.னு .. நீ எங்க பிஜேபி, ஆர்.எஸ்.எஸ்.னு பேசுற.. அவர்களைப் பற்றி நீங்க பேசுறதே இல்லை. நம்மை திட்டுவதுதான் பிஜேபி எதிர்ப்பு, ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு. இது ஒரு கொள்கைக்கு வெச்சுகிட்டு.... அணுகழிவை இடிந்தகரையில் கொட்டலாம் என்று சொல்றான்.. ஒருத்தர் கூட பேசலையே.. இவ்வாறு சீமான் விளக்கம் அளித்தார்.

    English summary
    Naam Tamilar Chief Seeman has clarified on his Ghar wapsi Speech.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X