பெரம்பலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெரம்பலூர் பக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது டைனோசர் முட்டை இல்லை.. மேட்டரே வேற.. ஆய்வில் தகவல்

Google Oneindia Tamil News

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உருண்டையாக கண்டெடுக்கப்பட்டது டைனோசர் முட்டை இல்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Recommended Video

    பெரம்பலூரில் கண்டுபிடிக்கப்பட்டது டைனோசர் முட்டை இல்லை- ஆய்வில் தகவல் | Oneindia Tamil

    பெரம்பலூர் அருகே குன்னம் பெரிய ஏரியில் சில தினங்கள் முன்பு மண் எடுத்து கொண்டிருந்தபோது, அம்மோனைட் எனப்படும், கடல்வாழ் நத்தைகளின் படிமங்களும் சிதைவுற்ற நிலையில் கிடைத்துள்ளன.

    அந்த ஏரியில் டைனோசர் முட்டை போல் பெரிய உருண்டை வடிவிலான படிமங்கள் கிடைத்துள்ளன. இந்த டைனோசர் முட்டைகள் மாமிச கார்னோட்டாரஸ் (Carnotaurus) மற்றும் இலைகள் மட்டும் உண்ணும் சைவ, சவுரபோட் டைனோசரின் முட்டைகளாக இருக்கலாம் என கூறப்பட்டது.

    கணக்கு வழக்கு இல்லாம செலவு செய்த பெரம்பலூர் பைரவி டீச்சரை தெரியுமா?.. ஆனா அத்தனையும் புண்ணிய கணக்கு!கணக்கு வழக்கு இல்லாம செலவு செய்த பெரம்பலூர் பைரவி டீச்சரை தெரியுமா?.. ஆனா அத்தனையும் புண்ணிய கணக்கு!

    பெரம்பலூர் டைனோசர் மீம்ஸ்

    பெரம்பலூர் டைனோசர் மீம்ஸ்

    இதனால் பெரம்பலூர் பகுதியில் டைனோசர் இருந்ததாகவும், அதைத்தான் ஆட்டு குட்டி போல மக்கள் தோளில் தூக்கிப் போட்டு சுற்றியதாகவும் வகை வகையாக மீம்ஸ் சுற்றி வந்தது. இரு நாட்களாக சமூக வலைத்தளங்களில், பெரம்பலூர் டைனோசர் பற்றிய பேச்சுத்தான். ஆனால் இப்போது அதில் பெரிய டுவிஸ்ட்.

     ஆய்வுகள்

    ஆய்வுகள்

    டைனோசர் முட்டை என செய்தி பரவியதால், திருச்சி அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் சிவகுமார் மற்றும் அரியலூர் மாவட்ட புதைஉயிரி அருங்காட்சியக (பொ) காப்பாட்சியர் உமாசங்கர் ஆகியோர் குன்னம் பகுதியில் குடிமராமத்து நடை பெற்ற ஏரி மற்றும் குன்னம் ஆனைவாரி ஓடையில் நேற்று கள ஆய்வு செய்துள்ளனர்.

    டைனோசர் முட்டை இல்லை

    டைனோசர் முட்டை இல்லை

    அதில் ஒரு உண்மை தெரியவந்தது. ஆம் அது டைனோசர் முட்டை கிடையாதாம். காப்பாட்சியர் சிவகுமார் அளித்த பேட்டியில் கூறியதாவது: குன்னம் ஏரியில் குடிமராமத்து பணியின்போது கண்டறியப்பட்ட உருண்டைகள் எதுவும் டைனோசர் முட்டைகள் கிடையாது.

    காரணம் இதுதான்

    காரணம் இதுதான்

    அதில் 3 உருண்டைகளின் மையத்தில் அமோனைட் எனப்படும் கடல்வாழ் நத்தைகளின் படிமங்கள் உள்ளது. அதாவது நத்தைகளின் படிமங்கள் மீது அம்மோனைட் படிவதால் ஏற்படும் உருண்டைதான் இதுவாகும். குன்னம் பகுதியில் பல இடங்களில் அமோனைட் மற்றும் கடலில் வாழும் உயிரினத்தின் ஓடுகளான கிளிஞ்சல்கள் அதிகம் கண்டறியப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    English summary
    The study revealed that the dinosaur egg was not found near Perambalur. Ammonite deposits on snail fossils is the reason.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X