பெரம்பலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் கொரோனா இல்லாத முதல் மாவட்டமானது பெரம்பலூர்! இந்த லிஸ்டில் வரப்போகும் 4 மாவட்டங்கள்!

Google Oneindia Tamil News

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் தமிழகத்தில் கொரோனா இல்லாத முதல் மாவட்டமானது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,228 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவ தொடங்கிய சுமார் 7 மாதத்தில் இதுவரை 7,59,916 பேரை பாதித்துவிட்டது. தமிழகத்தில் இதுவரை 11,495 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் அண்மைக்காலமாக தமிழகத்தில் கொரோனா பரவும் வேகம் குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 1721 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தற்போது வெறும் 15765 பேர் தொற்று பாதிப்புடன் தமிழகம் முழுவதும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று மட்டும் 2384 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 7,32,656 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து தமிழகத்தில் மீண்டுள்ளனர்.

செந்தில்பாலாஜி மீது அட்டாக்கை தொடங்கிய அண்ணாமலை... ரசிக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்..!செந்தில்பாலாஜி மீது அட்டாக்கை தொடங்கிய அண்ணாமலை... ரசிக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்..!

எங்கு அதிகம்

எங்கு அதிகம்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தை நோக்கி குறைந்து கொண்டே சென்று கொண்டிருக்கிறது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. நேற்று தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் மட்டுமே 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம்

பெரம்பலூர் மாவட்டம்

பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிக குறைவாக இருந்தது. நேற்று பெரம்பலூரில் புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்பட்வில்லை, 12 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தனர். மீதமிருந்த 31 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா இல்லாத முதல் மாவட்டம் என்ற பெருமையை பெரம்பலூர் பெற்றுள்ளது.

சிகிச்சை பெறுவோர் குறைவு

சிகிச்சை பெறுவோர் குறைவு

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 21 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 2228 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தென்காசி, தேனி, அரியலூர் விருதுநகர், ஆகிய மாவட்டங்களில் விரைவில் கொரோனா இல்லாத மாவட்டங்களாக மாற வாய்ப்பு உள்ளது. புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அங்கு மிககுறைவாக உள்ளது, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 100க்கும் கீழ் உள்ளது.

கொரோனா இல்லாத தமிழகம்

கொரோனா இல்லாத தமிழகம்

ஏன் சென்னை உள்பட எல்லா மாவட்டங்களுமே கொரோனாவை விரைவில் வீழ்த்த போகின்றன. அதற்கு சாதகமான மாற்றங்களே ஒவ்வொரு நாளும் நடக்கிறது. தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கைவும் வேகமாக குறைகிறது. மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முககவசம் அணிவது, வெளியில் சென்று வந்தால்சோப்பு போட்டு கை கழுவது போன்றவற்றை அடுத்த ஒராண்டுக்கு கடைபிடித்தால் இரண்டாவது அலை வருவதை தடுக்க முடியும். இல்லாவிட்டால் பழையபடி கொரோனா பரவினாலும் ஆச்சர்யமில்லை.

English summary
Perambalur district is the first corona free district in Tamil Nadu. A total of 2,228 people with corona have returned home after treatment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X