பெரம்பலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஆதாரம் எதுவுமே இல்லை".. 15 வயது சிறுமி பலாத்கார வழக்கில் திமுக மாஜி எம்எல்ஏ விடுதலை: ஹைகோர்ட்

பெரம்பலூர் திமுக மாஜி எம்எல்ஏ ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

பெரம்பலூர்: வீட்டில் வேலை செய்த சிறுமியை மாஜி திமுக எம்எல்ஏ ராஜ்குமார் பலாத்காரம் செய்தது தொடர்பாக கைதாகி இருந்தார்.. ஆனால், இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து ராஜ்குமாரை விடுதலை செய்துள்ளது சென்னை ஹைகோர்ட்.

பெரம்பலூர் முன்னாள் திமுக எம்எல்ஏ ராஜ்குமார்.. இவர் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை எம்எல்ஏவாக இருந்தவர். பெரம்பலூரில் இவரது வீடு உள்ளது.. இவர் வீட்டில் கேரள மாநிலம் பீர்மேடு பகுதியை சேர்ந்த் 15 வயசு சிறுமி வேலைக்கு வந்திருந்தார்.. 2012-ல் வீட்டு வேலைக்காக பணியில் சேர்க்கப்பட்டார்.

 perambalur former dmk mla rajkumar released

ஒருநாள் அந்த சிறுமிக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. இதையடுத்து, அவரை ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.. பிறகு, ராஜ்குமாரின் நண்பர் ஜெய்சங்கர் என்பவர் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் சொன்னார்.

இதனால் பதறியடித்து கொண்டு அவர்களும் விரைந்து வந்தனர்.. ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி இறந்துவிட்டார்.. இதனால் மகளின் சாவில் மர்மம் இருப்பதாக சொல்லி, பெற்றோர் பெரம்பலூர் போலீசில் புகார் தந்தனர்... இதனிடையே சிறுமியின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்தது.. அதில் பலாத்காரம் செய்து சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது.. இதையடுத்து வசமாக சிக்கினார் ராஜ்குமார்.

பல்வேறு வழக்குகளில் அவர் கைதானார்.. இவரை தவிர அவரது நண்பர்கள் ஜெய்சங்கர், பன்னீர்செல்வம் உட்பட 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.. இதையடுத்து, ராஜ்குமார் போலீசில் சரண் அடைந்தார்.. இது சம்பந்தமான வழக்கு பெரம்பலூர் கோர்ட்டில் நடந்து வந்தது.. ராஜ்குமார் முன்னாள் எம்எல்ஏ என்பதால், ஸ்பெஷல் கோர்ட்டுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

அவ்வழக்கின் தீர்ப்பில் ராஜ்குமார், ஜெய்சங்கர் ஆகிய இருவருக்கு 10 வருஷ ஜெயில் தண்டனையும், 42,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது. இந்த 10 வருஷ ஜெயில் தண்டனையை எதிர்த்து முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார், ஜெய்சங்கர் 2 பேரும் சென்னை ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தனர். இந்த தீர்ப்புதான் இன்று வழங்கப்பட்டது.

ஒற்றர்களின் கூடாரமான சீன தூதரகம்.... பூட்டானில் மூக்கை நுழைக்கும் சீனா... மைக் பாம்பியோ விளாசல்!!ஒற்றர்களின் கூடாரமான சீன தூதரகம்.... பூட்டானில் மூக்கை நுழைக்கும் சீனா... மைக் பாம்பியோ விளாசல்!!

அதன்படி 2 பேருக்கும் விதிக்கப்பட்ட 10 வருடஜெயில் தண்டனை ரத்து செய்யப்பட்டு, அவர்கள் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டது.. அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லை, போலீசார் சந்தேகத்துக்கு இடமின்றி குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கத் தவறிவிட்டனர் என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

English summary
perambalur former dmk mla rajkumar released
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X