பெரம்பலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெரம்பலூரில் பாலியல் கொடுமை நடந்ததாக புகார் கூறிய வக்கீல் அருள் 'திடீர்' கைது

பாலியல் புகார் தெரிவித்த வழக்கறிஞர் அருள் கைது செய்யப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

பெரம்பலூர்: பெரம்பலூரில் ஆளும் கட்சி பிரமுகர் மீது பாலியல் புகார் அளித்து அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான அருள் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்

சில தினங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், வக்கீலுமான அருள் என்பவர் ஆளும் தரப்பு எம்எல்ஏ ஒருவர் மீது அவதூறு புகார் ஒன்றினை மாவட்ட எஸ்பியிடம் அளித்திருந்தார்.

அதில், அரசு வேலை கேட்டு வரும் பெண்களிடம் ஆசைவார்த்தை கூறி, அவர்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டார் என்றும், பல பெண்களை ஏமாற்றி சீரழித்து, வீடியோ எடுத்து மிரட்டுகிறார் என்றும் தெரிவித்திருந்தார்.

மே தினம்.. சிவப்பு சட்டையில் தூத்துக்குடியை கலக்கிய ஸ்டாலின்.. செஞ்சட்டை உணர்த்துவது என்ன? மே தினம்.. சிவப்பு சட்டையில் தூத்துக்குடியை கலக்கிய ஸ்டாலின்.. செஞ்சட்டை உணர்த்துவது என்ன?

சிபிஐ விசாரணை

சிபிஐ விசாரணை

ஆனால் அந்த புகாரில், யார் அந்த ஆளுங்கட்சி நபர் என்று பெயர் சொல்லவில்லை. ஆனால் அவரிடம் பாதித்ததாக கூறப்பட்ட 2 பெண்களின் ஆடியோக்களை வெளியிட்டார். இதையடுத்து செய்தியாளர்களையும் சந்தித்து இது சம்பந்தமாக பேசினார்.

வக்கீல்கள்

வக்கீல்கள்

ஆளுங்கட்சி பிரமுகர் யார் என்று செய்தியாளர்களும் கேட்டனர். அதற்கு சிபிஐ விசாரணை வைத்தால் பெயரை சொல்வதாக கூறினார். இந்நிலையில் பெரம்பலூர் வக்கீல்கள் நலச்சங்கத்தைச் சேர்ந்த வக்கீல்கள் மாவட்ட எஸ்பியிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர்.

பட்டியலினம் வகுப்பு

பட்டியலினம் வகுப்பு

அதில், "வக்கீல் சொல்லும், அந்த அதிமுக பிரமுகர் ஒரு பட்டியலின வகுப்பை சேர்ந்தவர் என்பதால், அவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தி வருகிறார். இப்படி அடிப்படை ஆதாரமற்ற பொய் செய்திகளை பரப்பி வரும் வக்கீல் அருள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

திடீர் கைது

திடீர் கைது

இதேபோல் பெரம்பலூர் மாவட்ட அதிமுக மகளிர் அணியினரும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்துள்ளனர். தங்கள் கட்சிக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் வக்கீல் அருள் அவதூறு பரப்புவதாக அதிமுக சார்பில் அளிக்கப்பட்டதால், இந்த புகாரின் பேரில் போலீசார் அருளை கைது செய்தனர்.

English summary
Perambalur advocate Arul arrested for giving complaint women are sexually harassed
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X