பெரம்பலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லாட்ஜ் ரூமில் வைத்து.. பாஜகவினரால் தாக்கப்பட்டாரா நெல்லை கண்ணன்.. கைதின்போது நடந்தது என்ன?

நெல்லை கண்ணன் லாட்ஜில் தாக்கப்பட்டதாக சொல்கிறார்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழறிஞர் நெல்லை கண்ணன் கைது - வீடியோ

    பெரம்பலூர்: லாட்ஜ் ரூமிலேயே வைத்து நெல்லை கண்ணனை சிலர் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதற்கு பிறகுதான் போலீசார் அவரை கைது செய்து இழுத்து சென்று ஜீப்பில் ஏற்றி உள்ளனர்!

    பிரபல பட்டிமன்ற பேச்சாளர், தமிழறிஞர் நெல்லை கண்ணன்.. இவர் டிசம்பர் 29-ந் தேதி மேலப்பாளையத்தில் ஒரு கூட்டத்தில் பேசினார்.. மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சி சார்பாக இந்த கூட்டம் நடத்தப்பட்டது.

    இந்த கூட்டம் முழுவதும் பாஜகவை உண்டு, இல்லை என ஆக்கிவிட்டார்.. பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் முதல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் வரை கடுமையாகவும் பகிரங்கமாகவும், ஒருமையிலும் பேசினார்.. மேலும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரஞ்சன் கோகாய் பற்றியும் கருத்துக்களை தெரிவித்ததாக சொல்லப்பட்டது. நெல்லை கண்ணனின் இந்த ஒட்டுமொத்த பேச்சும் இணையத்தில் வைரலானது. தமிழக பாஜகவினர் கொதித்து போய்விட்டனர்.

    ஆபரேஷன் சக்ஸஸ் என எச். ராஜா டிவிட் செய்தது எப்படி? அடியாட்கள் வந்தது ஏன்? சந்தேகம் எழுப்பும் சுப.வீ ஆபரேஷன் சக்ஸஸ் என எச். ராஜா டிவிட் செய்தது எப்படி? அடியாட்கள் வந்தது ஏன்? சந்தேகம் எழுப்பும் சுப.வீ

    கைது

    கைது

    நெல்லை கண்ணன் கைது செய்யப்பட வேண்டும் என பாஜக சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய போலீசார் விரைந்தனர். அதற்குள் அவருக்கு உடம்பு சரியில்லை என்று கூறி நெல்லையில் இருந்து மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அழைத்து செல்ல முயன்றனர்.

    ஆதரவாளர்கள்

    ஆதரவாளர்கள்

    இதற்கு மதுரை பாஜகவினர் எதிர்ப்பு சொல்லவும், மதுரை செல்லாமல் திரும்பி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால், நெல்லை கண்ணன் நேற்றெல்லாம் எங்கிருந்தார் என்றே தெரியாமல் இருந்த நிலையில், சிகிச்சைக்காக திருவனந்தபுரம் சென்றிருக்கலாம் என்றும் தகவல்கள் பரவின. இந்த சமயத்தில்தான், பெரம்பலூர் தனியார் லாட்ஜ் ஒன்றில் ஆதரவாளர்கள் நெல்லை கண்ணனை தங்க வைத்திருக்கிறார்கள் என்ற தகவல் போலீசாருக்கு எட்டியது.

    வர முடியாது

    வர முடியாது

    அதனால் அந்த லாட்ஜுக்கு போலீசார் விரைந்தபோது, நெல்லை கண்ணன் அங்குதான் தங்கியிருந்தது தெரியவந்ததையடுத்து அவரை சுற்றி வளைத்தனர். முக்கிய ஆதரவாளர்கள் பொறுப்பில் அவர் தங்க வைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். போலீசார் நெல்லை கண்ணனை லாட்ஜில் வைத்து கைது செய்ய முயன்றபோது, அதற்கு நெல்லை கண்ணன் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். வர முடியாது என்றும் மறுத்துள்ளார்.

    தாக்கினார்களா?

    தாக்கினார்களா?

    அந்த சமயத்தில் அங்கிருந்த சிலர் ஆவேசமடைந்து நெல்லை கண்ணனை சரமாரியாக தாக்கியதாக சொல்கிறார்கள்.. மேலும் பாஜகவினரும் நெல்லை கண்ணனைக் கைது செய்யும்வரை கோஷங்களை எழுப்பி கொண்டே இருந்துள்ளனர்.. இதனால் அந்த லாட்ஜ் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    வைரல் பதிவுகள்

    வைரல் பதிவுகள்

    அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், நெல்லை கண்ணனை இழுத்து சென்று வேனில் ஏற்றி உள்ளனர்.. நெல்லை கண்ணன் தாக்கப்பட்டாரா என்பது குறித்து காவல்துறை தரப்பில் எந்த உறுதிப்படுத்தலும் இதுவரை இல்லை. மொத்தத்தில் நெல்லை கண்ணன் கைதும், இந்த விவகாரமும் பெரும் விவகாரமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் நெல்லை கண்ணனை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைரலாகி வருகிறது.

    English summary
    sources say that bjp members attacked nellai kannan in the lodge before arrested
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X