பெரம்பலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஃபேனில் தூக்கிட்டு தொங்கிய கீர்த்தனா.. 2 முறை நீட் எழுதியும் தோல்வி.. சீட் கிடைக்காத விரக்தி!

பெரம்பலூர் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

Google Oneindia Tamil News

Recommended Video

    தூக்கிட்டு தொங்கிய கீர்த்தனா.. 2 முறை நீட் எழுதியும் தோல்வி

    பெரம்பலூர்: 2 முறை நீட் எழுதியாச்சு.. சீட் கிடைக்காத விரக்தியில் வீட்டில் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் கீர்த்தனா என்ற மாணவி.

    பெரம்பலூரில் அரசு பஸ் கண்டக்டராக இருந்து ஓய்வு பெற்றவர் செல்வராஜ். இவரது மகள் கீர்த்தனா. போன வருஷம் பிளஸ் டூ முடித்தார். அப்போது 1053 மார்க் எடுத்திருந்தார்.

    Student Keerthana committed suicide due to Failed in Neet Exam

    சின்ன வயசில் இருந்தே டாக்டருக்கு படிக்கணும்னு ஆசை.. அதனால் நீட் தேர்வு எழுதவும், 202 மார்க் மட்டுமே எடுக்க முடிந்தது. அதனால் டாக்டருக்கு படிக்க முடியவில்லை.

    ஒரு வருஷம் வீண் ஆனாலும் பரவாயில்லை, அடுத்த வருஷம் நீட் எழுதி டாக்டர் ஆகலாம் என்று முடிவு செய்து, இந்த வருடமும் அதற்கு தயாரானார். அதற்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில், நீட் தேர்வுக்கான பயிற்சியும் பெற்றார். ஆனால் 2019-ம் ஆண்டு நீட் தேர்வில் 384 மார்க் மட்டுமே எடுக்க முடிந்தது. அதனால் இந்த வருஷமும் டாக்டருக்கு படிக்க முடியவில்லை.

    இதனால் மனம் நொந்து போனார் மாணவி. இது போதாதன்று, தன்னுடன் படித்த தோழி, பொதுத்தேர்வில் குறைவான மார்க் இருந்தும், நீட் தேர்வில் நிறைய மார்க் எடுத்து மெடிக்கல் சீட்டும் கிடைத்துவிடவும் இன்னும் அளவுக்கு அதிகமாகவே மன அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. இதை தன்னுடைய குடும்பத்தினரிடம் அடிக்கடி சொல்லி அழுதிருக்கிறார் கீர்த்தனா.

    இந்த ஒரு மாத கால கட்டத்தில் கடும் விரக்தியான கீர்த்தனா, வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, ஃபேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து போலீசார் கீர்த்தனாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    English summary
    Perambalur Student Keerthana committed suicide due to failed in the 2019 Neet Exam
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X