பெரம்பலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேர்தலில் மக்கள் தான் நீதிபதிகள்… நல்ல தீர்ப்பை வழங்குவார்கள்… முதலமைச்சர் பழனிசாமி நம்பிக்கை

Google Oneindia Tamil News

பெரம்பலூர்: தேர்தலில் மக்கள்தான் நீதிபதிகள்; அவர்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.சிவபதிக்கு ஆதரவாக முசிறியில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், கோதாவரி - காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்திற்கு பிறகு வறட்சி பகுதிகளில் விவசாயம் செழிக்கும் என்று தெரிவித்தார்.

The peoples are judges in the election; they will give a good judgment Says Chief Minister Palanisamy

உங்கள் லோக்சபா தொகுதி.. என்ன சிறப்பு தெரியுமா? சுவாரசிய தகவல்கள்!

காவிரி உட்பட தமிழக நதிகளில் ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் தடுக்க எத்தனை தடுப்பணைகள் தேவையோ அத்தனையும் கட்டித்தரப்படும் என்றும், அதற்காக 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு மூலம் ஏராளமான விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்பதாலேயே திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என விளக்கமளித்தார். வேளாண் மக்கள் பயன்பெறும் வகையில் உணவு பூங்கா, கால்நடை பூங்கா குளிர்பதன கிடங்கு ஆகியவை கொண்டுவரப்படும் என கூறினார். மேலும், விவசாயிகளுக்கு 2 ஏக்கர் ஏக்கம் இலவசமாக கொடுப்பதாக கூறிய திமுக, மக்களிடம் இருந்து நிலத்தை வாங்கிக் கொண்டார்கள் என விமர்சித்தார்.

கேட்ட சீட்டும் கிடைக்கலை.. தொகுதியும் தரலை.. இப்ப இருந்த பட்ட பெயரும் பறி போயிருச்சு.. பரிதாப வைகோ கேட்ட சீட்டும் கிடைக்கலை.. தொகுதியும் தரலை.. இப்ப இருந்த பட்ட பெயரும் பறி போயிருச்சு.. பரிதாப வைகோ

முதலமைச்சர் பேசிக் கொண்டிருந்த போது கடந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழி விடுமாறு கூட்டத்தினரை அவர் கேட்டுக்கொண்டார். ஆம்புலன்ஸ் கடந்து சென்ற பின் அவர் தனது பேச்சைத் தொடர்ந்தார்.

English summary
Chief Minister Palanisamy Said that The peoples are judges in the election; they will give a good judgment
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X