பெரம்பலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போனில் வருவதாக சொன்ன செந்தில்.. கடைசி நேரத்தில் தாமதம்.. பெரம்பலூரை மநீம இழந்தது இப்படித்தான்!

சிறிய தாமதம் காரணமாக லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    லேட்டாக வந்த மநீம வேட்பாளர் செந்தில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியவில்லை- வீடியோ

    பெரம்பலூர்: சிறிய தாமதம் காரணமாக லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

    லோக்சபா தேர்தலில் போட்டியிட இருக்கும் பெரம்பலூர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் செந்தில்குமார் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. காலதாமதம் காரணமாக இவர் வேட்புமனு தாக்கல் செய்ய முடியவில்லை.

    இது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது... நாளை வேட்பு மனுக்கள் பரிசீலனைதமிழகத்தில் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது... நாளை வேட்பு மனுக்கள் பரிசீலனை

    எப்படி நடந்தது

    எப்படி நடந்தது

    மக்கள் நீதி மய்யம் கட்சி பெரம்பலூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த செந்தில்குமார் சரியாக 2.30 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. அவருக்கு அவரது தொண்டர்கள் காத்து இருந்தனர். அதேபோல் செந்தில்குமாரின் விண்ணப்பங்கள் ஏற்கனவே தயாராக அங்கு கொண்டு செல்லப்பட்டு இருந்தது.

    தாமதம்

    தாமதம்

    இதையடுத்து தனது ஆதரவாளர்களுக்கு 3 மணி அளவில் கால் செய்த செந்தில்குமார் நான் வர சிறிது தாமதம் ஆகும். அதனால் என்னுடைய விண்ணப்பங்களை கொண்டு அதிகாரிகளிடம் கொடுங்கள். டோக்கன் போட்டு வைக்கவும் என்று கூறி இருக்கிறார். ஆனால் இதுவும் கூட 3 மணிக்குத்தான் கூறப்பட்டு இருக்கிறது.

    என்ன செய்தனர்

    என்ன செய்தனர்

    இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் கூட்டத்தை தாண்டி உள்ளே சென்று ஆவணத்தை கொடுக்க 3.10 மணி ஆகிவிட்டது. ஆனாலும் அதிகாரிகள் இந்த ஆவணங்களை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். இதையடுத்து மீண்டும் கால் செய்த செந்தில்குமார் '' வந்து கொண்டே இருக்கிறேன்'' என்று கூறி இருக்கிறார்.

    ஆனால் ஏற்கவில்லை

    ஆனால் ஏற்கவில்லை

    அதன்பின் செந்தில்குமார் ஆதரவாளர்களை அழைத்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், டோக்கன் அளிக்க முடியாது. ஆவணங்கள் வழங்கப்பட்ட நேரமே 3.10 தான். அதனால் ஆவணங்களை ஏற்க முடியாது என்று கூறியுள்ளனர். இதையடுத்து 3.20 மணிக்கு செந்தில்குமார் அங்கு வந்துள்ளார்.

    அனுமதி இல்லை

    அனுமதி இல்லை

    ஆனால் அவரையும் அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவர்கள் கொடுத்த விண்ணப்பங்களையும் திருப்பி அளித்தனர். ஆவணங்களை ஏற்க முடியாது, 20 நிமிடம் தாமதமாகிவிட்டது என்றுள்ளனர். இதனால் தற்போது மக்கள் நீதி மய்யம் தமிழகத்தில் 38 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

    English summary
    This his how Makkal Needhi Maiam candidate Senthil Kumar loses his nominations in Perampalur.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X