பெரம்பலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வருகிற தேர்தலில் நாம் யார் என்பதை காட்ட வேண்டும்… தொண்டர்கள் மத்தியில் விஜய பிரபாகரன் முழக்கம்

Google Oneindia Tamil News

பெரம்பலூர்: நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நாம் யார் என்பதை காட்ட வேண்டும் என்று விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் தொண்டர்கள் மத்தியில் பேசினார் .

அதிமுக - தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், இன்று மாலைக்குள் முடிவு எட்டப்பட்டு உடன்பாடு கையெழுத்தாகும் என கூறப்படுகிறது .

To show who we are in the election; Vijaya Prabhakaran speech among volunteers

திமுக பொருளாளர் துரைமுருகன் கூட்டணி குறித்து தெரிவித்த கருத்துக்கு தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் காரசாரமாக பதிலளித்தார். முன்னதாக, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த்தை மத்தியமைச்சர் பியூஷ் கோயல், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திருநாவுக்கரசர், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் தனித்தனியாக நேரில் சந்தித்து பேசினர்.

எத்தியோபியாவிலிருந்து நைரோபி சென்ற விமானம் விபத்து.. பயணிகளின் நிலை என்ன? எத்தியோபியாவிலிருந்து நைரோபி சென்ற விமானம் விபத்து.. பயணிகளின் நிலை என்ன?

இதனையடுத்து, கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய பிரபாகரன் கூட்டணிக்காக தங்களது வீட்டு வாசலில் ஏன் வந்து நிற்கிறார்கள் என்று கடும் சொற்களால் விமர்சனம் செய்தார். இதற்கு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், பெரம்பலூர் அருகே உள்ள எழுமூர் கிராமத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜயபிரபாகரன், தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது விஜயகாந்த் காட்டும் வழியில் செயல்பட்டு வருகிற தேர்தலில் நாம் யார் என்பதை காட்ட வேண்டும் என்றார். அடுத்து 2021 ஆம் ஆண்டு தேர்தலில் நம்முடைய நோக்கம் வெற்றி அடைய உறுதி ஏற்க வேண்டும் எனவும் கூறினார். மேலும், இன்று மாலை தேமுதிகவின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

English summary
Vijaya Prabhakaran speech among volunteers: To show who we are in Lok Sabha election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X