பெரம்பலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெரம்பலூரில் கனமழை.. காட்டாற்று வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிப்பு.. தனித்தீவான 10 கிராமங்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    மக்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் ஆர்பி உதயகுமார்

    பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் அருகே உள்ள பச்சமலையில் கனமழை பெய்தது. இதனால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு 10 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.

    தமிழகத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றால் கனமழை பெய்து வருகிறது. அதிலும் நேற்றும் இன்றும் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டது.

    Transportation disconnects for 10 villages near Perambalur

    இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் கடந்த 4 தினங்களாக மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பெரம்பலூர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது.

    அது போல் அரும்பாவூர் அருகே பச்சமலையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 10 கிராமங்களுடனான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுவிட்டது.

    ஆஹா.. எல்லாம் நேற்று இரவோடு முடிஞ்சி போச்சு.. காலையும் தொடரும் என எதிர்பார்த்து ஏமாற்றம்.. வெதர்மேன்ஆஹா.. எல்லாம் நேற்று இரவோடு முடிஞ்சி போச்சு.. காலையும் தொடரும் என எதிர்பார்த்து ஏமாற்றம்.. வெதர்மேன்

    மேலும் தாழை நகரில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அது போல் ஆத்தூர் செல்லும் சாலையிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    English summary
    As Perambalur gets heavy rain, transportation for 10 villages disconnected and people affects a lot.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X