For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்த குழந்தைகளின் வாழ்க்கையை முன்னேற்ற சிறு உதவி செய்யுங்கள்

சென்னை: ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய உங்களின் நன்கொடை உதவிகள் தேவைப்படுகிறது.

சேவ் தி சில்ட்ரன் (Save the Children) தன்னார்வல அமைப்பு, இந்தியாவின் 18 மாநிலங்களிலும், உலகெங்கிலும் 80 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் செயல்படுகிறது. 2008ம் ஆண்டு முதல் இந்தியாவில் 1.1 கோடி குழந்தைகளின் வாழ்க்கையை மாற்றிக் காட்டியுள்ளது.

கஷ்டப்படும், குழந்தைகளுக்கு தரமான கல்வி மற்றும் நல்ல வாழ்க்கை, வாழ்க்கையை காப்பாற்றும் சுகாதார சேவைகள் மற்றும் தீங்கு மற்றும் துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாப்பு ஆகியவற்றை குழந்தைகளுக்கு வழங்கி வருகிறோம்.

தற்போது, ​​இந்தியாவின் 18 மாநிலங்களில் 65 திட்டங்கள் இயங்குகின்றன. 2019 ஆம் ஆண்டில், நாங்கள் மொத்தம் 12.64 லட்சம் குழந்தைகளை சென்று அடைந்தோம். அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் உதவிகளை செய்தோம்.

சேவ் தி சில்ட்ரன் அமைப்புக்கு கொடுக்கப்படும், அனைத்து நன்கொடைகளுக்கும் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80 ஜி இன் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகின்றன.

2018- 2019ம் ஆண்டில் 31 சதவீதம் குழந்தைகளின் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்துக்காக பயன்படுத்தப்பட்டது. 19 சதவீத நிதி பாதுகாப்பிற்காக செலவிடப்பட்டது. 14 சதவீத நிதி ஏழைக்குழந்தைகளின் கல்விக்காக செலவிடப்பட்டது. 15 சதவீத நிதி பேரிடர் காலத்தில் உதவிக்காக பயன்படுத்தப்பட்டது. இதர பல்வேறு மனிதாபிமான உதவிகளுக்காக 20 சதவீத நிதி பயன்படுத்தப்பட்டது.

சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி மற்றும் மனிதாபிமானப் பணிகள் என பல சேவைகள் செய்துவரும் இந்த அமைப்புக்கு உங்கள் நிதி உதவி தேவைப்படுகிறது. உங்களால் முடிந்த நிதியுதவியை செய்ய இணையதளம் வழியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X