For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

4.3 கோடி லைக்ஸ்.. உலகின் மிகவும் பிரபலமான அரசியல் தலைவராக மோடி.. 2ம் இடத்தில் டிரம்ப்!

பேஸ்புக்கில் உலகின் மிகவும் பிரபலமான அரசியல் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

Google Oneindia Tamil News

சென்னை: பேஸ்புக்கில் உலகின் மிகவும் பிரபலமான அரசியல் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், பாரதிய ஜனதா கட்சிக்கு வெற்றியை தேடி தந்த விஷயங்களில் முக்கியமானது நரேந்திர மோடியின் நவீன சிந்தனைகள். சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துபவரான மோடி, அதில் அதிகம் உலவும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தார்.

pm modi declared facebooks most popular world leader

தற்போது மோடி அரசின் ஐந்தாண்டு கால ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில் இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்குமா என்பது மே 23ம் தேதிக்கு பிறகு தான் தெரியவரும்.

இந்நிலையில் பேஸ்புக்கில் உலகின் மிகவும் பிரபலமான அரசியல் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது தனிப்பட்ட பக்கத்தில், சுமார் 4.3 கோடிக்கும் அதிகமாக லைக்குகளும், அலுவலகப் பக்கதில் 1.3 கோடி லைக்குகளும் பெற்றுள்ளார் அவர்.

'இந்த' பீச்சில் செல்பி எடுத்தால் மரண தண்டனை கன்பார்ம்! 'இந்த' பீச்சில் செல்பி எடுத்தால் மரண தண்டனை கன்பார்ம்!

அவருக்கு அடுத்தப்படியாக, 2.3 கோடி லைக்குகளுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். ஜோர்டன் நாட்டு ராணி ராணியா, 1.7 கோடி லைக்குகளுடன் 3வது இடத்தில் உள்ளார்.

பிசிடபுள்யூ எனும் நடத்திய ஆய்வின் மூலன் இது தெரியவந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு பேஸ்புக்கில் உலக தலைவர்கள் எனும் தலைப்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் இடம் பிடிப்பதற்காக நிறைய அரசியல் தலைவர்கள் தற்போது பேஸ்புக்கில் விளம்பரம் செய்ய துவங்கியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

English summary
Prime Minister Narendra Modi, with over 43.5 million likes on his personal Page and 13.7 million likes on his official Page on Facebook, is the most popular world leader on the social network.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X