For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தினகரன் கட்டுப்பாட்டில் கார்டன்- ஓரம்கட்டப்படும் விவேக்

தினகரன் கட்டுப்பாட்டில் போயஸ் கார்டன் உள்ளது. அதுபோல் விவேக் ஜெயராமனும் ஓரங்கட்டப்படுகிறார் என்று கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: போயஸ் கார்டன் நிர்வாகத்தை முற்றிலும் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார் டி.டி.வி.தினகரன். ' ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்தவர்கள், சசிகலாவுக்கு வேண்டப்பட்டவர்கள் எனப் பலரையும் வேலையைவிட்டு நீக்கிவிட்டார் தினகரன். அவருக்கு வேண்டப்பட்டவர்களே இப்போது பொறுப்பில் உள்ளனர்' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில்.

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு கார்டனில் வசித்து வந்த சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அதற்கு முன்னதாக, ' கட்சி விவகாரத்தை தினகரனும் கார்டன் நிர்வாகத்தை வெங்கடேஷும் கவனித்துக் கொள்ளட்டும்' எனப் பாகம் பிரித்துவிட்டுப் போனார்.

இதன்பிறகு, அவ்வப்போது கார்டனுக்குள் வந்து உறங்கிவிட்டுச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக். ஒருகட்டத்தில் கார்டன் நிர்வாகத்தில் இருந்து வெங்கடேஷ் ஒதுங்கிக் கொண்டார்.

கார்டன் அதிகாரத்தில்

கார்டன் அதிகாரத்தில்

ஜாஸ் சினிமாஸ், ஜெயா டி.வி நிர்வாகத்தோடு கார்டன் கணக்கு வழக்குகளையும் கவனித்து வந்தார் விவேக். அவருக்கு உதவியாளர்களாக சிலர் இருந்தனர். சசிகலாவால் கொண்டு வரப்பட்ட பூங்குன்றன், அடிக்கடி வந்து சென்றார். மன்னார்குடி குடும்பத்தினருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக, அவரும் கார்டன் அதிகாரத்தில் இருந்து ஓரம்கட்டப்பட்டார்.

 பணிப்பெண் ராஜம்மாள்

பணிப்பெண் ராஜம்மாள்


ஜெயலலிதா மரணம் தொடர்பாக கார் ஓட்டுநர் அய்யப்பன், கார்டன் உதவியாளர் கார்த்திகேயன், பணிப்பெண் ராஜம்மாள் உள்ளிட்டோர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி, வாக்குமூலம் அளித்தனர். இவர்கள் எல்லாம் சசிகலாவால் கொண்டு வரப்பட்டவர்கள் என்பதால், போதுமான ஆதாரங்கள் எதுவும் ஆணையத்துக்குக் கிடைக்கவில்லை.

 போயஸ் கார்டன்

போயஸ் கார்டன்


இந்நிலையில், ' ஜெயா டி.வி அதிகாரத்தைக் கைப்பற்றும் முனைப்பில் ஒவ்வொன்றாக தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கிறார் தினகரன்' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். இதுதொடர்பாக நம்மிடம் பேசியவர்கள், " போயஸ் கார்டனுக்குள் முன்பு போல யாரும் செல்வதில்லை

 விவேக் கையில்

விவேக் கையில்

இதன் சாவிகள் அனைத்தும் விவேக் கையில்தான் இருந்தன. தோட்டத்துக்கு வரக் கூடிய கடிதங்களை ஆனந்தன் என்பவர்தான் தொகுத்து வைப்பார். அவரையும் இப்போது பணியில் இருந்து நீக்கிவிட்டார் தினகரன். அதேபோல், நீண்டநாள்களாக பணிபுரியும் ஊழியர்கள் உள்பட சிலரை நீக்கிவிட்டு தனக்கு வேண்டப்பட்டவர்களை நியமித்திருக்கிறார்.

சிறை கார்டனுக்குள்

சிறை கார்டனுக்குள்

முன்பெல்லாம் வாரத்துக்கு சிலமுறை கார்டனுக்குள் வருவார் விவேக். தொழில் தொடர்பான விவாதங்களையும் நடத்துவார். இப்போது மாதத்துக்கு ஓரிருமுறை வருகிறார். அவரைக் கண்காணிப்பதற்காகக்கூட புதிய ஆட்கள் நியமிக்கப்பட்டிருக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக விவேக்கிடம் இருந்து அதிகாரத்தைப் பறிக்கும் முயற்சியாகவே இதைப் பார்க்க வேண்டியதாக

English summary
Poes Garden is in the control of Dinakaran. Vivek Jayaraman is sidelined.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X