புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Cyclone Nivar: புதுவையில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு அமல்.. மக்கள் வெளியே வரக் கூடாது!

Google Oneindia Tamil News

புதுவை: நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிவர் புயல் நிலைக் கொண்டுள்ளது. இந்த புயல் நாளை பிற்பகல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை, கடலூர், விழுப்புரம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

3 days curfew restriction in Puducherry

இந்த பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இந்த பகுதிகளில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

பயமே வேணாம்.. ராத்திரி 11.30க்கு நாகை அருகே புயல் கரையை கடக்கும்.. சொல்கிறார் தகட்டூர் செல்வகுமார் பயமே வேணாம்.. ராத்திரி 11.30க்கு நாகை அருகே புயல் கரையை கடக்கும்.. சொல்கிறார் தகட்டூர் செல்வகுமார்

புதுவை கடற்கரையில் 7-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுவையில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுவிட்டது.

3 days curfew restriction in Puducherry

எனினும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்று முதல் புதுவையில் 3 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று தொடங்கும் ஊரடங்கு உத்தரவு வரும் 26-ஆம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Pondicherry Government implements curfew restriction for 3 days ahead of Cyclone Nivar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X