புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிறுத்தாமல் சைக்கிள் ஓட்டி அசால்ட் செய்த 7 வயது சிறுவன்.. 82 கி.மீட்டரை கடந்து சாதனை

Google Oneindia Tamil News

புதுவை: காலாப்பட்டு என்ற இடத்திலிருந்து மாமல்லபுரம் வரையிலான 82 கி.மீ தூரம் உள்ள கிழக்கு கடற்கரை சாலையை, சைக்கிள் மூலம் கடந்து 7 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளான்.

கோவையை சேர்ந்த கோபால்சாமி என்பவரது மகன் அபினவ் என்ற சிறுவனே, இச்சாதனையை நிகழ்த்தியுள்ளான். 2-ம் வகுப்பு படித்து வரும் அபினவ் புதுச்சேரியில் உள்ள காலாப்பட்டிலிருந்து மாமல்லபுரம் வரையிலான 82 கிமீ தொலைவை சைக்கிள் மூலம் கடந்துள்ளான்.

7-year-old boy record driving bicycle with non stop and crossed 82 km

நான் ஸ்டாப்பாக இடையில் எங்கேயும் சைக்கிளை நிறுத்தாமல், சுமார் 3 மணிநேரம் 40 நிமிடங்களில் இந்த 82 கி.மீ தொலைவை அச்சிறுவன் கடந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளான்.

அதிகாலை 4.30 மணிக்கு சைக்கிள் பயணத்தை துவக்கிய சிறுவன் அபினவ், இடையில் எங்யேுமே நிறுத்தாமல் தொடர்ந்து பயணித்து காலை 8.20 மணிக்கு மாமல்லபுரத்தை அடைந்தான்.

நல்லகண்ணுவுக்கும் கக்கன் குடும்பத்தினருக்கும் பொது ஒதுக்கீட்டில் வீடு.. தமிழக அரசு உறுதி நல்லகண்ணுவுக்கும் கக்கன் குடும்பத்தினருக்கும் பொது ஒதுக்கீட்டில் வீடு.. தமிழக அரசு உறுதி

தொடர் பயிற்சியின் மூலமே இந்த சாதனை சாத்தியமானதாக சிறுவன் அபினவ் கூறியுள்ளான். மேலும் தனது பெற்றோர் ஊக்கமளித்து உற்சாகப்படுத்துவதாகவும் கூறினான்.

இச்சாதனையை படைத்த சிறுவனுக்கு ஏசியா புக் ஆஃப் ரெக்கார்டு மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு என்ற நிறுவனங்கள் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்துள்ளது.

English summary
The 7-year-old boy has crossed the East Coast road, 82 km from kalapattu to Mamallapuram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X