புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக பகுதியில் இறங்கக்கூடாது.. கடும் கட்டுப்பாடுகளுடன் புதுவை-காரைக்காலுக்கு பேருந்து சேவை தொடக்கம்

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து தமிழகத்தின் இரு மாவட்டங்களை கடந்து புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதிக்கு புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சமூக இடைவெளியுடன் பயணிகள் பேருந்துகள் சேவை தொடங்கியது.

A govt bus service has been started from Puducherry to Karaikal

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நான்காவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை புதுச்சேரி அரசு அறிவித்தது. அதில் புதுச்சேரிக்குள் பேருந்துகளை இயக்குவது என அறிவிக்கப்பட்டு நேற்று முதல் உள்ளூர் பேருந்துகள் பல்வேறு வித்தடங்களில் இயக்கப்பட்டது.

மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை.. இனி விமான பயணம் எப்படி இருக்கும்? அதிரடி மாற்றம்மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை.. இனி விமான பயணம் எப்படி இருக்கும்? அதிரடி மாற்றம்

A govt bus service has been started from Puducherry to Karaikal

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தின் ஒரு பகுதியான காரைக்கால் மாவட்டத்திற்கும் பேருந்துகளை இயக்க புதுச்சேரி அரசு முடிவெடுத்தது. புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி என கடலூர் மற்றும் நாகை மாவட்டங்கள் வழியாக காரைக்காலுக்கு பேருந்துகள் செல்ல வேண்டுமென்பதால் கடலூர் மற்றும் நாகை மாவட்ட ஆட்சியர்களிடம் அனுமதி கோரப்பட்டது.

A govt bus service has been started from Puducherry to Karaikal

இதனையடுத்து தமிழக பகுதிகளில் பயணிகளை ஏற்றவோ இறக்கவோ கூடாது என்ற நிபந்தனையுடன் இரு மாவட்ட ஆட்சியர்களிடம் அனுமதி பெறப்பட்டதை தொடர்ந்து, இன்று காலை முதல் காரைக்காலுக்கு புதுச்சேரி அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது.

A govt bus service has been started from Puducherry to Karaikal

முன்னதாக பேருந்தில் ஏறும் பயணிகள் முகக்கவசம் அணிந்தும், கைகளில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு பேருந்தில் ஏற்றப்பட்டார்கள். மேலும் சமூக இடைவெளியுடன் 32 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பேருந்து புறப்படுவதற்கு முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாறன், பயணிகளிடம் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் வழிகாட்டுதலுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், தமிழக பகுதிகளில் இறங்கக்கூடாது என அறிவுறுத்தினார். பயணிகளின் வரவேற்பை பொறுத்து கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
A govt bus service has been started from Puducherry to Karaikal
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X