புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவிடமிருந்து காப்பாத்துற உங்களுக்கு.. நானே சமைச்சு போடறேன்.. அசத்தும் எம்எல்ஏ!

Google Oneindia Tamil News

புதுச்சேரி: மருத்துவர்கள் தொடங்கி துப்புரவு பணியாளர் வரை கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக தனது தொகுதியில் பணியாற்றுவோருக்கு தேவைப்படும் மதிய உணவை தானே தயாரித்து விநியோகித்து வருகிறார் புதுச்சேரி அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன்.

Recommended Video

    கொரோனாவிடமிருந்து காப்பாத்துற உங்களுக்கு.. நானே சமைச்சு போடறேன்.. அசத்தும் எம்எல்ஏ! - வீடியோ

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. புதுச்சேரியிலும் கடந்த திங்கட்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

    ஊரடங்கு உத்தரவினால் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு உணவு கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளதால், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மாவட்ட நிர்வாகத்துடன் ஒன்றிணைந்து, தினந்தோறும் ஆதரவற்றவர்களுக்கு உணவளித்து வருகின்றனர். அதேபோல் வீதிகளில் சுற்றிதிரியும் நாய்களுக்கும் ஒருசிலர் தொடர்ந்து உணவளித்து வருகின்றனர்.

    3வது ஸ்டேஜை சமாளிக்க ரெடியாகும் இந்தியா.. ரயில் பெட்டிகளும் கொரோனா வார்டுகளாக மாறுகிறது 3வது ஸ்டேஜை சமாளிக்க ரெடியாகும் இந்தியா.. ரயில் பெட்டிகளும் கொரோனா வார்டுகளாக மாறுகிறது

     துப்புரவு பணியாளர்கள்

    துப்புரவு பணியாளர்கள்

    அதே நேரத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் பல்வேறு துறையை சார்ந்த ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் உணவு கிடைப்பதில்லை. இதனை கருத்தில் கொண்டு, முத்தியால்பேட்டை தொகுதி அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் தனது தொகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிவோர், போலீஸார், துப்புரவு பணியாளர்களுக்கு தேவையான உணவை தானே தயாரித்து வழங்க தொடங்கியுள்ளார்.

    வையாபுரி மணிகண்டன்

    வையாபுரி மணிகண்டன்

    இதுகுறித்து வையாபுரி மணிகண்டன் கூறுகையில், ஊரடங்கு உத்தரவால் தானும் வீட்டில் இருப்பதால், அந்த நேரத்தை பயனுள்ளதாக மாற்றும் வகையில் தானே உணவுகளை சமைத்து நண்பகலில் முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு நேரடியாக வழங்குவதாக தெரிவித்தார்.

    தானே சமைக்கிறார்

    தானே சமைக்கிறார்

    உணவு மட்டுமல்லாமல் தொகுதியில் உள்ள மக்களுக்கு வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருள்களை வழங்க எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் ஏற்பாடு செய்துள்ளார். தொகுதி மக்களுக்கு தேவையான மளிகைப் பொருள்கள், அரிசி, மருந்துகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை கடைகளில் வாங்கி மக்களின் வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.

    தொடர்பு எண்கள்

    தொடர்பு எண்கள்

    இதற்காக கொரோனா வைரஸ் தொற்று இல்லாதவாறு பரிசோதிக்கப்பட்ட நபா்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் இந்தச் இந்தச் சேவையைப் பெற விரும்புவோா் கமல் - 98944 22658, அசோக் - 97915 53285, மணி - 97905 28694, ஸ்ரீகாந்த் - 98943 46910, பிரசாந்த் - 99447 04176, சரண்- 90927 07191, ராஜேஷ் - 99521 25352, கணபதி - 99528 98279, தினா - 88707 84801, பாஷா - 90034 35611 ஆகியோரைத் தொடா்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    ADMK MLA distributes food pockets to coronavirus prevention workers
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X