புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதுச்சேரியில் 1 முதல் 9 வகுப்பு வரை ஆல் பாஸ்.. மாணவர்கள் ஹேப்பி.. நாராயணசாமி அதிரடி!

Google Oneindia Tamil News

புதுச்சேரி: கொரோனா அச்சுறுத்தலால் ஆண்டு இறுதி தேர்வு நடத்த முடியாத சூழலினால் புதுச்சேரி மாநிலத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதுமே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

All pass announcements for Puducherry school students

இந்நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க புதுச்சேரி மாநிலத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 14 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். அதனால் ஆண்டு இறுதித்தேர்வு நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

அதனால் 1 வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு இறுதித்தேர்வு புதுச்சேரியில் ரத்து செய்யப்படுகிறது. 1 ஆம் வகுப்பு முதல் 9 வரை படித்த அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

அப்பாடா ஹேப்பி நியூஸ்.. திருச்சி மக்களுக்கு கொரோனா தொற்று இல்லை.. இருந்தாலும் கவனமா இருங்க! அப்பாடா ஹேப்பி நியூஸ்.. திருச்சி மக்களுக்கு கொரோனா தொற்று இல்லை.. இருந்தாலும் கவனமா இருங்க!

இதனிடையே புதுச்சேரி காலாபட்டு மத்திய சிறையில் 160 விசாரணை கைதிகள், 80 தண்டனை கைதிகள், 5 பெண் கைதிகள் இருந்தனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக கைதிகளை விடுவிக்க சிறை நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி 4 பெண் விசாரணை கைதிகள் உள்பட 79 பேர் சிறையிலிருந்து விடுவிக்கபட்டனர்.

English summary
Puducherry govt has announced that all students from 1st to 9th std will be passed withou exams.Puducherry school students
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X