புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நான் தான் கொரோனா.. என்னை தேடி நீ வெளியே வராதே".. புதுவை சாலைகளில் விழிப்புணர்வு ஓவியம்

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியில் சாலையின் நடுவே பிரம்மாண்டமான ஓவியம் வரைந்து கொரோனா வைரஸ் குறித்து நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் தேவையின்றி சிலர் வெளியே நடமாடுகின்றனர்.

Awareness of coronavirus is being painted on the roads in Puducherry

ஊரடங்கை மீறி வெளியே வருவோரை சில இடங்களில் போலீஸார், காலில் விழாத குறையாக கெஞ்சி திருப்பி அனுப்புகின்றனர். சில இடங்களில் நூதன தண்டனை அளிப்பது, வழக்குப் பதிவு செய்வது, வாகனங்களை பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Awareness of coronavirus is being painted on the roads in Puducherry

இந்நிலையில் மக்களிடம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, முதலியார்பேட்டை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் நூதன முயற்சியை மேற்கொண்டுள்ளார். சாலையில் இருசக்கர வாகனங்களில் சுற்றி திரிவோரையும், வீட்டை விட்டு வெளியே வருவோரையும் எச்சரிக்கும் விதமாக முதலியார்பேட்டை காவல் நிலையம் அருகே பச்சை மற்றும் வெள்ளை வண்ணத்தில் 30 அடி நீளம், 40 அடி அகலம் கொண்ட பிரமாண்டமான கொரோனா வைரஸ் படத்தை வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

Awareness of coronavirus is being painted on the roads in Puducherry

படத்தின் கீழ் ''நான் தான் கொரோனா", "என்னை தேடி நீ வெளியே வராதே வந்தால் உனக்கு நிச்சயம் மரணம்'' என்ற வாசகத்தையும் எழுதியுள்ளனர். தொடர்ந்து முதலியார்பேட்டை அம்பேத்கர் சாலை, புவன்கரே வீதி, மரப்பாலம் சந்திப்பு, சுதானா நகர், 100 அடி சாலை உள்ளிட்ட இடங்களிலும் இதுபோன்று விழிப்புணர்வு படம் வரையப்பட உள்ளது.

உங்க பகுதியில் கொரோனா இருக்கு.. நீங்க பணிக்கு வர வேண்டாம்.. தனிமைப்படுத்தப்பட்ட 21 காவலர்கள்உங்க பகுதியில் கொரோனா இருக்கு.. நீங்க பணிக்கு வர வேண்டாம்.. தனிமைப்படுத்தப்பட்ட 21 காவலர்கள்

Awareness of coronavirus is being painted on the roads in Puducherry

இதேபோல் புதுச்சேரியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலா்களுக்கு கொரோனா தொற்று பரவுவதைத் தடுப்பது குறித்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணியில் போலீஸாா் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனா். இதனால், அவா்கள் மன உளைச்சலுக்கும், உடல் நிலை பாதிப்புக்கும் உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Awareness of coronavirus is being painted on the roads in Puducherry

இதையடுத்து, சுகாதாரத் துறை சாா்பில் போலீஸாா் தங்களை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக் கொண்டு, பணியாற்றுவது குறித்து அவா்கள் பணியாற்றும் இடங்களுக்கே சென்று மன நலம் மற்றும் பொது மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.

Awareness of coronavirus is being painted on the roads in Puducherry
Awareness of coronavirus is being painted on the roads in Puducherry
English summary
Awareness of coronavirus is being painted on the roads in Puducherry
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X