புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

4 சுயேச்சைகள்.. பக்காவா செக் வைத்த ரங்கசாமி.. ஆடிப்போன பாஜக.. புதுச்சேரியில் அடுத்து என்ன?

Google Oneindia Tamil News

புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு விபூதி அடிக்கலாம் என்று நினைத்த பாஜக மேலிடம், கள நிலவரத்தை பார்த்து கப்சிப் என்று பின்வாங்கி விட்டது.

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது.

என்னதாங்க நடக்குது? அவரே தூது சென்றும் சரியாகவில்லை.. உறுதியாக நிற்கும் ஓபிஎஸ்.. எகிறும் டென்சன்!1 என்னதாங்க நடக்குது? அவரே தூது சென்றும் சரியாகவில்லை.. உறுதியாக நிற்கும் ஓபிஎஸ்.. எகிறும் டென்சன்!1

அங்கு ஆளுநராக இருந்த கிரண்பேடி மற்றும் நாராயணசாமி இடையே தினம் ஒரு மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், சட்டசபை பதவி காலம் நெருங்கும் நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து விட்டு பாஜகவுக்கு, கட்சி தாவியதால், ஆட்சி கவிழ்ந்தது.

வந்தார் தமிழிசை

வந்தார் தமிழிசை

இந்த நிலையில்தான் புதுச்சேரி ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து மக்கள் நலப் பணிகளைச் செய்து பழைய ஆளுநர் ஏற்படுத்தியிருந்த கெட்ட பெயரை அகற்றும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட தொடங்கினார். இன்னொருபக்கம் என்ஆர் காங்கிரஸ் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைப்பதில் வெற்றி கண்டது.

கூட்டணி களேபரம்

கூட்டணி களேபரம்

ஆனால் என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி யை முதல்வராக ஏற்காமல் பாஜக தங்கள் தரப்புக்கு முதல்வர் பதவி தர வேண்டும் என்று முதலில் கூறியதால் கூட்டணியில் இழுபறி நீடித்தது. பிறகு ஒருவழியாக ரங்கசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டது பாஜக. ஆனால், பல்வேறு மாநிலங்களிலும் பாஜக தலைமை கடைசி நேரத்தில் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு முதல்வர் பதவிக்கு லாபி செய்ததை நன்கு அறிந்தவர் தான் ரங்கசாமி. எனவேதான் அவர் பதிலடியாக வியூகம் வகுத்தார்.

சுயேச்சை வியூகம்

சுயேச்சை வியூகம்

மொத்தமுள்ள 30 தொகுதிகளில், 16 தொகுதிகளில் என்ஆர் காங்கிரஸ் போட்டியிட்டது. 4 தொகுதிகளில் ரங்கசாமியால் சுயேச்சைகள் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர் . அதற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. ஏனென்றால், புதுச்சேரி அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 6 சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். இதில், ரங்கசாமி நிறுத்தியதாக கூறப்பட்ட நான்கு எம்எல்ஏக்களும் உண்டு.

புதுச்சேரி நிலவரம்

புதுச்சேரி நிலவரம்

இன்னொரு பக்கம், என்ஆர் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் வென்றுள்ளது. பாஜகவுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக, 5 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில் கூட வெற்றி பெற முடியவில்லை. காங்கிரஸ் கட்சி 14 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு இடங்களை மட்டும் தான் கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு கூட வரமுடியாத நிலைமைக்கு போய் விட்டது.

பாஜகவுக்கு ஆசை

பாஜகவுக்கு ஆசை

இந்த நிலையில்தான் பாஜக தலைமைக்கு திடீரென ஒரு ஆசை முளைத்த.து ஆஹா.. எந்த கட்சியும் தனிப் பெரும்பான்மை பெறவில்லை. எனவே 6 சீட் வைத்துள்ள நாம், முதல்வர் பதவி கேட்டு ரங்கசாமிக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்று வியூகம் வகுத்தது. பாஜக முதல்வர் பதவி கேட்கும் தகவல் சமூக வலைதளங்களிலும் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

ரங்கசாமியிடம் வேண்டாம்

ரங்கசாமியிடம் வேண்டாம்

ஆனால், புதுச்சேரி பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா பதறிப் போய் விட்டார். யாரிடம் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம், ரங்கசாமியிடம் நாம் வைத்துக் கொள்ளக்கூடாது. இதுதான் களநிலவரம் என்று டெல்லிக்கு மெசேஜ் அனுப்பி விட்டார். இதற்கு காரணம் இருக்கிறது.. தனது சொந்த கட்சியினரை தாண்டி நான்கு இடங்களில் சுயேச்சைகளை நிறுத்தி வெற்றி பெற வைத்தவர் ரங்கசாமி. நாம் காங்கிரஸ் கட்சியில் ஒருவரை இழுத்துக்கொண்டு சுயேச்சைகள் 6 பேரையும் நம்ம பக்கம் இழுத்து விடலாம் என்று நினைத்துவிடாதீர்கள். அதில் நான்கு பேர் ரங்கசாமி ஆட்கள்.

ரங்கசாமி பதிலடி

ரங்கசாமி பதிலடி

சுயேச்சைகளை வைத்து நமது தொகுதிகளில் நம்மை அவர் தோற்கடித்துள்ளார் ரங்கசாமி. நாம் ஒரு திட்டம் போட்டால் அவர் அதற்கு முன்பே பதிலடி திட்டம் வகுத்து வைத்துள்ளார். அப்படிப்பட்டவரிடம் நாம் உரசினால், திமுக , காங்கிரசுடன் சேர்ந்து அவர் ஆட்சி அமைத்து கொள்ள தயங்கவே மாட்டார். எனவே வெயிட்டான அமைச்சர் பதவிகளை கேட்போம். அப்படியே அமைதியாக இருப்போம் என்று சொல்லியுள்ளார்.

அமைச்சர் பதவி

அமைச்சர் பதவி

அதுவும் சரிதான் என்ற முடிவுக்கு வந்துள்ள, பாஜக மேலிடம், மூன்று அமைச்சர் பதவி இடங்களை ரங்கசாமியிடம் வலியுறுத்துமாறு நிர்மல் சுரானாவுக்கு உத்தரவு போட்டுள்ளது. இந்த தகவலை எடுத்துக்கொண்டு நிர்மல் குமார் போனதற்கு ரங்கசாமி அதை ஏற்க மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதனால் புதுச்சேரி அரசியல் நாளுக்கு நாள் பரபரப்பாக காணப்படுகிறது.

English summary
BJP high command, taking caution steps in Puducherry politics, NR Congress leader Rangasamy is giving good move against BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X