புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிராமண மணப்பெண்.. தலித் மணமகன்.. அம்பேத்கர் மணிமண்டபத்தில்.. பெளத்த முறையில்.. புதுவையில் பரபரப்பு!

அம்பேத்கர் மணிமண்டபத்தில் சாதி மறுப்பு திருமணம் நடந்துள்ளது

Google Oneindia Tamil News

புதுச்சேரி: மணப்பெண் பிராமணர்.. மாப்பிள்ளை ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்.. 2 பேரும் அம்பேத்கர் மணிமண்டபத்தில் பௌத்த முறையில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.. ஆனால் கொரோனா காலத்தில் ஏராளமானோர் அங்கு திடீரென திரண்டு விட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி பிச்சவீரன்பேட் பகுதியைச் சேர்ந்தவர் லிங்க சுப்பிரமணியன்... 23 வயதாகிறது.. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்... காலேஜ் படிக்கும்போது, சக தோழி ஹேமலதா என்ற பெண்ணுடன் அறிமுகமானது.. ஹேமலதா வேல்ராம் பேட்டையை சேர்ந்தவர்.

இதையடுத்து இந்த நட்பு காதலானது.. 2 பேருமே 5 வருஷங்களாக காதலித்து வந்துள்ளனர்... இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்...லிங்க சுப்பிரமணியன் ஆதி திராவிட சமூகத்தை சேர்ந்தவர். ஹேமலதா பிராமண சமூகத்தை சேர்ந்தவர்.

 மறுப்பு

மறுப்பு

இவர்கள் 2 பேருமே கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.. அதன்படியே அவரவர் வீடுகளில் சென்று கல்யாண விஷயத்தை பேசினர்.. ஆனால், லிங்க சுப்பிரமணியன் குடும்பத்தில் மட்டும் இவர்கள் காதலை ஏற்றுக்கொண்டனர்... ஹேமலதா வீட்டில் அனுமதிக்கவில்லை.

 தஞ்சம்

தஞ்சம்

இதையடுத்து, ஹேமலதா அவரது வீட்டை விட்டு வெளியேறி, லிங்க சுப்பிரமணியன் வீட்டில் தஞ்சமடைந்தார். லிங்க சுப்பிரமணியனின் அப்பா சிவக்குமார், இந்திய குடியரசுக்கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் ஆவார். அவர்தான் இந்த கல்யாணத்தை நடத்த முடிவு எடுத்தார்.

 கல்யாணம்

கல்யாணம்

அதன்படி, புதுச்சேரி கடற்கரை சாலை அம்பேத்கர் மணிமண்டபத்தில் பவுத்த முறைப்படி கல்யாணம் நடந்தது.. அதன் நுழைவு வாயிலில் உள்ள புத்தர் சிலையின் அருகே ஜோடிகள் 2 பேரும் சாதி மறுப்பு, திருமண உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்... பிறகு அம்பேத்கர் சிலையின் முன்பு இந்த திருமணம் நடந்து முடிந்தது.. புத்த பிட்சு இருவருக்கும் கல்யாணத்தை நடத்தி வைத்தார். மணமக்கள் மாலையை மாற்றிக் கொண்டு பவுத்த முறைப்படி கல்யாணமும் செய்து கொண்டு உறுதிமொழியும் ஏற்றனர்.

 விசாரணை

விசாரணை

ஆனால், இந்த கல்யாணத்துக்கு ஏராளமானோர் திரண்டு வந்துவிட்டனர்.. இது கொரோனா காலம் என்பதையும் மறந்து, அரசின் உத்தரவையும் மறந்து கூட்டம் சேர்ந்துவிட்டது.. இந்த தகவல் அறிந்து பெரியக்கடை போலீஸார் அங்கு விரைந்து வந்தனர்... அம்பேத்கர் மண்டபத்தில் கல்யாணம் நடந்ததா என்ற விசாரணையில் இறங்கினர்.. என்றாலும், கல்யாணத்துக்கு வந்தவர்கள் அங்கிருந்து கிளம்ப தொடங்கிவிட்டனர்.

மனுஸ்மிருதி

மனுஸ்மிருதி

இந்த திருமணம் பற்றி ஹேமலதா சொல்லும்போது, "மனுஸ்மிருதியில் பெண்கள் குறித்து உள்ள கருத்துகள் ஏற்கும்விதமாக இல்லை... அதனால் எந்த மதமும் வேண்டாம் என்று முடிவு செய்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டேன்' என்றார்.

English summary
Caste denial marriage held in puducherry Ambedkar mani mandapam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X