புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

5000 புகார்களை தீர்த்துள்ளதாக கூறுவது பொய்.. கிரண்பேடியை நெனச்சா சிரிப்புதான் வருது.. நாராயணசாமி

Google Oneindia Tamil News

புதுச்சேரி: ஆளுநர் கிரண்பேடி 50 ஆயிரம் புகார்களை தீர்த்துள்ளதாக கூறுவது அப்பட்டமான பொய் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் மிக குறைவாக இருந்த கொரோனா தொற்று தற்போது படிப்படியாக உயர்ந்து வருகிறது. வெளிநாடு மற்றும் சென்னையிலிருந்து வருபவர்கள் கரோனா தொற்றோடு வருவதுதான் இதற்கு காரணம்.

chief minister V.Narayanasamy press conference against Governor Kiran bedi

காய்கறி மார்க்கெட்டை மாற்றுவது சம்பந்தமாக ஆட்சியர், நகராட்சி அதிகாரிகளை அழைத்து பேசி, பழைய இடத்துக்கு செல்வதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம். அது நாளைய தினம் நடைமுறைப்படுத்தப்படும். ஆனால், மிக கடுமையான கட்டுப்பாடுகளோடு புதுச்சேரி பெரிய மார்க்கெட்டுக்கு காய்கறி மார்க்கெட் வரும். கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்துதான் தமிழகம் முழுவதும் கொரோனா பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த நிலை புதுச்சேரிக்கு வரக் கூடாது. காய்கறி மொத்த வியாபாரிகள் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால் கடைகள் மூடப்படும். கடைகள் எல்லாம் இரவு 8 மணி வரை திறந்திருக்க வேண்டும்.

chief minister V.Narayanasamy press conference against Governor Kiran bedi

இரவு 9 மணிக்கு முதல் காலை 5 மணி வரை யாரும் வெளியில் நடமாடக் கூடாது என ஊரடங்கு உத்தரவில் தெளிவாக கூறியுள்ளோம். ஆளுநர் கிரண்பேடி அலுவலகத்துக்கு இதுவரை 50 ஆயிரம் புகார்கள் வந்திருப்பதாகவும், அந்த புகார்களை எல்லாம் அவர் தீர்த்துவிட்டதாகவும் கூறியிருப்பதை இன்று நான் படித்தேன். அதனை பார்த்ததும் எனக்கு சிரிப்புதான் வந்தது. ஆளுநர் அலுவலகம் புகார் பெறுகிற அலுவலகம் அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோடு ஆளுநர் இணைந்து செயல்பட வேண்டும். ஆளுநருக்கு ஒரு புகார் வருகிறது என்றால், அதனை சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு, முதல்வர் மூலமாக அனுப்ப வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் அதனை பரிசீலனை செய்து விசாரித்து நடவடிக்கை எடுப்பார். ஆளுநர் வேலை புகார்களை விசாரிப்பதல்ல.

chief minister V.Narayanasamy press conference against Governor Kiran bedi

அவர் ஒரு விசாரணை அதிகாரியும் அல்ல. அவர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் நியமிக்கப்பட்டவர். ஆளுநருக்கு நேரடியாக எந்த புகாரையும் விசாரிக்க அதிகாரம் கிடையாது. இந்திய ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது, அந்த ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கின்ற வகையில் ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

chief minister V.Narayanasamy press conference against Governor Kiran bedi

அவர் தினமும் மக்களை தன்னுடைய அலுவலகத்துக்கு வர சொல்லி புகார்களை பெற்று, அதுசம்பந்தமாக விசாரணை செய்கிறேன் என்று மக்கள் மத்தியில் தம்பட்டம் அடித்து கொள்கிறார்கள். அவர் எந்தெந்த புகார்களை விசாரித்தார். அவர் விசாரிப்பதற்கு யார் அதிகாரம் கொடுத்தது. எந்த அதிகாரி விசாரித்தார். அதன் இறுதி முடிவு என்ன? என்று மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

ரொம்ப நாள் கழிச்சி வீட்டுக்கு போறீங்க.. காதல் பொங்கிட்டா.. இதை பிடிங்க, ஜாலியா இருங்க: அசத்தும் அரசுரொம்ப நாள் கழிச்சி வீட்டுக்கு போறீங்க.. காதல் பொங்கிட்டா.. இதை பிடிங்க, ஜாலியா இருங்க: அசத்தும் அரசு

50 ஆயிரம் புகார்களை தீர்த்து வைத்தேன் என ஆளுநர் கிரண்பேடி கூறுவது அப்பட்டமான பொய். உண்மைக்கு புறம்பானது. மாநில அரசு சார்பில் என்னிடமும், அமைச்சர்களிடம் புகார்கள் வருகின்றன. அதனை விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம். ஆனால், ஆளுநருக்கு தனிப்பட்ட முறையில் புகார்களை பெறுவதற்கோ, அதன் மீது விசாரணை நடத்துவதற்கோ சட்டப்படி அதிகாரம் இல்லாதபோது, தானே 50 ஆயிரம் புகார்களை விசாரித்து தீர்வு கண்டேன் என கூறுவதை யாரும் நம்ப முடியாது, ஏற்றுக் கொள்ளவும் முடியாது.

chief minister V.Narayanasamy press conference against Governor Kiran bedi

ஆளுநர் கிரண்பேடி கடந்த 4 ஆண்டுகளாக ஜனநாயகத்தை மதிப்பது கிடையாது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை மதிப்பது கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிப்பது கிடையாது, மக்களை மதிப்பது கிடையாது. தன்னிச்சையாக செயல்படுவது. தான் நினைத்ததை செய்ய வேண்டும் என நினைப்பது. விதிமுறைகளை பற்றி கவலைபடுவது கிடையாது.

ஆளுநர் கிரண்பேடி தனக்கு அதிகாரம் உள்ளது என்று சொல்லிக்கொண்டு 50 ஆயிரம் புகார்களை விசாரித்தேன் என்று கூறுவது மக்களை ஏமாற்றுகின்ற வேலை. புதுச்சேரியில் 4 ஆண்டுகாலமாக மக்கள் நலனுக்காகவும், மாநில வளர்ச்சிக்காவும் கிரண்பேடி ஒன்றுமே செய்யவில்லை. மக்கள் நலத்திட்டங்களை தடுத்து நிறுத்தியதை தவிர கிரண்பேடியின் சாதனை எதுவும் இல்லை என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

English summary
Puducherry state chief minister V.Narayanasamy press conference against Governor Kiran bed
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X