புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நான் ஒரு சாமியார்.. போட்டியிடச் சொன்னா போட்டியிடுவேன்.. நாராயணசாமி அதிரடி

Google Oneindia Tamil News

Recommended Video

    தனிப்பட்ட விருப்பு வெறுப்பு என்று ஒன்றும் கிடையாது: நாராயணசாமி

    புதுச்சேரி: எனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு என்று ஒன்றும் கிடையாது. லோக்சபா தேர்தலில் கட்சி தலைமை கேட்டுக்கொண்டால் நான் போட்டியிவேன். நான் ஒரு சாமியார் என்று கூறி அதிர வைத்துள்ளார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.

    புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நேற்று முன்தினம் பாகிஸ்தான் தீவிரவாத முகாமில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்திய ராணுவம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள நிலையில், துரதர்ஷ்டவசமாக அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் பிடியில் சிக்கியுள்ளார். உடனடியாக அவரை பாகிஸ்தான் விடுவிக்க இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    cm narayanasamy press meet

    இந்த விவகாரத்தை அரசியல் செய்யக்கூடாது எனக்கூறிவிட்டு தற்போது பாஜகவினர் பாகிஸ்தான் தீவிர முகாம்கள் மீதான தாக்குதலை அரசியல் ஆக்கக்கூடாது.

    துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து நாங்கள் போராட்டம் நடத்தியபோது அதிகாரிகளுக்கு தேர்வு எழுத வைப்பது சரிதானா என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை. ஆனால் தொடர்ந்து அவர் அதிகாரிகளுக்கு தேர்வு வைத்து வருகின்றார்.

    இது வெறும் காகிதம் தான், அவர்களுக்கு எந்தவிதத்திலும் உதவாது. கிரண்பேடி தொடர்ந்து அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகின்றார் என்றார் நாராயணசாமி. வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிவீர்களா என செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், எனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு என்று ஒன்றும் கிடையாது, கட்சி தலைமை கேட்டுக்கொண்டால் நான் போட்டியிவேன் என்று கூறிய அவர், நான் ஒரு சாமியார் என்றும் பதிலளித்தார்.

    English summary
    Puducherry CM Narayanasamy has said that he will contest in LS polls if party asks to do.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X