புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புதுவை: திமுக- காங். கருத்து வேறுபாடுகள் பேசி தீர்க்க முடியும்: கே.எஸ். அழகிரி நம்பிக்கை

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியில் திமுகவுடனான கருத்து வேறுபாடுகளை பேசி தீர்க்க முடியும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுவை சட்டசபை தேர்தலில் கோஷ்டி பூசல்கள் அதிகம் இருப்பதாலும் காங்கிரஸ் பிரமுகர்கள் பாஜகவுக்கு தாவும் நிலையில் இருப்பதாலும் கூட்டணியை முறித்து கொள்ள திமுக முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு பதில் என்.ஆர். காங்கிரஸுடன் திமுக கூட்டணி அமைக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Cong. will continue with DMK Alliance in Puducherry and Tamilnadu, KS Azhagiri

புதுவையில் கட்சி, ஆட்சி அதிகாரம் இரண்டும் முதல்வர் நாராயணசாமி வசமே இருப்பதுதான் இந்த அதிருப்திக்கு காரணமாக சொல்லப்படுகிறது. புதுவையில் திமுக எடுத்திருக்கும் முடிவு குறித்து அம்மாநில நிர்வாகிகள் ராகுல் காந்தியிடம் முறையிட்டும் உள்ளனர்.

இதனிடையே புதுவையில் ஆளுநர் கிரண்பேடியை சந்திக்க அனுமதி கோரி 2 வாரமாக தொடர் போராட்டம் நடத்தி வரும் அமைச்சர் கந்தசாமியை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ். அழகிரியிடம் திமுகவின் முடிவு குறித்து கேள்வி எழுப்பினர்.

புதுவையில் 'முதல்வர் வேட்பாளர்' ஜெகத்ரட்சகன் தலைமையில் இன்று திமுக பரபர ஆலோசனை புதுவையில் 'முதல்வர் வேட்பாளர்' ஜெகத்ரட்சகன் தலைமையில் இன்று திமுக பரபர ஆலோசனை

இதற்கு பதிலளித்த கே.எஸ். அழகிரி, புதுவையில் திமுக- காங்கிரஸ் இடையேயான கருத்து வேறுபாடுகள் பேசி தீர்க்கப்படும் என்கிற நம்பிக்கை இருக்கிறது என்றார். மேலும் தமிழகம், புதுச்சேரியில் திமுகவுடனான கூட்டணி தொடரும் எனவும் கே.எஸ். அழகிரி கூறினார்.

English summary
TNCC President KS Azhagiri said that Cong. will continue with DMK Alliance in Puducherry and Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X