புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடிக்கடி கை கழுவுங்க.. கையை சுத்தமாக வச்சிருங்க.. புதுச்சேரி போலீஸ் சூப்பரப்பு!

Google Oneindia Tamil News

புதுச்சேரி: கொரோனா வைரஸிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள மக்கள் எவ்வாறு தங்களது கைகளை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை புதுச்சேரி போக்குவரத்து காவலர்கள் சிக்னல்களில் நிற்கும் வாகன ஓட்டிகள் முன்பு வரிசையாக நின்று செய்முறை விளக்கம் செய்து காண்பித்தது பயனுள்ளதாக இருந்தது.

Recommended Video

    அடிக்கடி கை கழுவுங்க.. கையை சுத்தமாக வச்சிருங்க.. புதுச்சேரி போலீஸ் சூப்பரப்பு! - வீடியோ
    Coronavirus awareness program by Puducherry traffic police

    கொரோனா வைரசிலிருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு தற்காத்து கொள்ள வேண்டும் என புதுச்சேரி அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனது. இந்நிலையில் புதுச்சேரி போக்குவரத்து காவலர்கள் புதுவிதமான விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்றுமுதல் தொடங்கி உள்ளனர்.

    Coronavirus awareness program by Puducherry traffic police

    புதுச்சேரி சிக்னல்களில் நிற்கும் வாகன ஓட்டிகள் முன்பு வரிசையாக நின்று கொண்டு 30 வினாடிகளில் கைகளை கழுவும் முறையையும், எவ்வாறு சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதை பொறுமையாக அழகாக செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.

    Coronavirus awareness program by Puducherry traffic police

    இதனிடையே புதுச்சேரி மாநிலம் முழுவதும் கிருமி நாசினி மற்றும் முகக்கவசம் ஆகியவற்றை அதிக விலைக்கு விற்க கூடாது என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள சில தனியார் மருந்தகங்களில் முகக்கவசங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து, எடையளவுத்துறை அதிகாரிகள் விஜயரங்கம் மற்றும் குமார் ஆகியோர் தனியார் மருந்தகங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    Coronavirus awareness program by Puducherry traffic police

    கொரோனா.. நெஞ்சை பிழியும் காட்சி.. இவ்வளவு மோசமாகிவிட்டதா பெங்களூர் நிலைமை? கொரோனா.. நெஞ்சை பிழியும் காட்சி.. இவ்வளவு மோசமாகிவிட்டதா பெங்களூர் நிலைமை?

    அப்போது விவிபி நகர், அம்பலத்தடையார் மடத்து வீதி மற்றும் பாரதி வீதியில் உள்ள மருந்தககங்களில் முக கவசங்கள் அதிக விலைக்கு விற்றதாக சுமார் 3000 அளவிலான முக கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட மருந்தகங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார்.

    English summary
    Coronavirus awareness program is being held by Puducherry traffic police.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X