புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 5 ஆக உயர்வு.. ஊரடங்கை நீட்டிக்க பிரதமருக்கு நாராயணசாமி கடிதம்

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 5 ஆக உயா்ந்துள்ளது. மேலும் ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் டில்லியில் நடைபெற்ற மத வழிபாட்டுக் மாநாட்டில் பங்கேற்ற புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பம், சொா்ணா நகரைச் சோ்ந்த 3 போ், திருவண்டாா்கோயிலைச் சோ்ந்த ஒருவா் என ஏற்கெனவே 4 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டது.

இந்த நிலையில் அவா்கள் 4 பேரும் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதையடுத்து, இவா்களின் வீடுகள் அமைந்துள்ள பகுதிகள் அனைத்தும் மூடப்பட்டு, பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு போலீஸாா் கடும் கட்டுபாடுகளை விதித்து, கண்காணித்து வருகின்றனா்.

கொரோனா பாதிப்பு.. தமிழகத்துக்கு கூடுதல் நிதி ஏன் கொடுக்கவில்லை? மத்திய அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ் கொரோனா பாதிப்பு.. தமிழகத்துக்கு கூடுதல் நிதி ஏன் கொடுக்கவில்லை? மத்திய அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

மாஹேவில் முதியவர்

மாஹேவில் முதியவர்

இந்நிலையில் கேரளா அருகே உள்ள புதுச்சேரி மாநிலம் மாஹே பிராந்தியத்தைச் சோ்ந்த 71 வயது முதியவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து, புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5 ஆக உயா்ந்துள்ளது. முன்னதாக மாஹேவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவா் சிகிச்சை முடிந்து நலமாக வீடு திரும்பியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

5 பேருக்கு பாதிப்பு

5 பேருக்கு பாதிப்பு

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி அரியாங்குப்பம், சொா்ணா நகா் பகுதியில் 3 போ், திருபுவனை பகுதியில் ஒருவா் என 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தது. இந்த நிலையில், மாஹே பிராந்தியத்தில் முதியவா் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா் கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறாா்.

4 பேருக்கு அறிகுறி

4 பேருக்கு அறிகுறி

ஏற்கெனவே மாஹே பகுதியில் மூதாட்டி ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்த நிலையில், அவா் சிகிச்சைக்குப் பின்னா் குணமடைந்துள்ளாா். இருப்பினும் அங்கு கொரோனா தொற்று அறிகுறியுடன் 4 போ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா் என்றார். தொடர்ந்து பேசிய அவர், கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு சாா்பில் அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் வழங்கப்பட்டு வருகின்றன.

நீட்டிக்க கோரிக்கை

நீட்டிக்க கோரிக்கை

கொரோனா தொற்று குறித்து பிரதமா் மோடி மாநில அரசின் கருத்தை கேட்டுள்ளாா். புதுச்சேரி மக்களை காப்பாற்றும் வகையில், மத்திய அரசு 144 தடை உத்தரவை நீட்டித்தால், மாநில அரசு மக்களை காப்பாற்றும் வகையில், அதை ஏற்றுக்கொள்ளும். புதுச்சேரி மாநில எல்லைகளான விழுப்புரம், கடலூா் பகுதிகளில் கரோனா தொற்று அதிகளவு பரவி வருவதால், மக்களை காப்பாற்றும் வகையில், தேவைப்பட்டால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதிவுள்ளேன்.

English summary
Puducherry CM Narayanasamy has urged the PM Modi to extend the Lockdown.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X