புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புதுச்சேரியில் 9 மையங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை

மத்திய அரசின் உத்தரவின்படி புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகிறது.

Google Oneindia Tamil News

புதுச்சேரி: மத்திய அரசின் உத்தரவின்படி புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய மாவட்டங்களில் 9 மையங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகிறது.

Recommended Video

    புதுச்சேரியில் மொத்தம் 9 மையங்கள்.. கொரோனா தடுப்பூசி ஒத்திகை...!

    புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 38 ஆயிரத்து 164 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 37 ஆயிரத்து 165 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 633 உயிரிழந்துள்ளனர்.

    Covid-19 vaccine dry run today in Puducherry

    புதுச்சேரியில் மட்டும் 30 ஆயிரத்து 488 பேரும், காரைக்காலில் 3 ஆயிரத்து 790 பேரும், ஏனாமில் 2 ஆயிரத்து 102 பேரும், மாகியில் ஆயிரத்து 784 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி சட்டசபை அருகே உள்ள இந்திராகாந்தி அரசு மருத்துவமனை, தட்டாஞ்சாவடி ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரி, கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவமனை, கோரிமேடு இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஆகிய 4 இடங்களில் கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    காரைக்கால் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, திருநள்ளாறு சமுதாய நலவழி மையம், நெடுங்காடு மேம்படுத்தப்பட்ட அரசு நலவழி மையம் ஆகிய 3 இடங்களிலும், ஏனாம் அரசு மருத்துவமனை, மாகி அரசு மருத்துவமனை என மாநிலம் முழுவதும் மொத்தம் 9 மையங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகிறது.

    English summary
    Corona vaccine dry run is being held in the state of Pondicherry as per the order of the Central Government. Corona vaccination rehearsals are being conducted at 9 centers in Pondicherry, Karaikal, Magi and Enam districts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X