புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தலைமறைவான வட மாநில கொரோனா வாலிபர் நிதின் சர்மா.. தேடப்படும் நபராக அறிவித்தது விழுப்புரம் நிர்வாகம்

Google Oneindia Tamil News

விழுப்புரம்: விழுப்புரத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, தலைமறைவாக உள்ள வடமாநில வாலிபர் நிதின் சர்மாவை, தேடப்படும் நபராக அறிவித்தது விழுப்புரம் மாவட்ட நிர்வாகம். மேலும் 3 தனிப்படைகள் அமைத்து அந்த வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Recommended Video

    பில்வாரா மாடலை கையிலெடுக்கும் மத்திய அரசு... மாஸ் திட்டம்

    விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று வரை 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 51 வயதுடைய தலைமை ஆசிரியர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

    Covid19 positive person absconded from Villupuram Government Hospital

    இந்நிலையில் கொரோனா தொற்று அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த 26 பேர் கடந்த 7 ஆம் தேதி விடுவிக்கப்பட்டனர். இவர்கள் விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவர்களில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Covid19 positive person absconded from Villupuram Government Hospital

    இதனிடையே அந்த 4 பேரில் 3 நபர்கள் விழுப்புரத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை போலீசார் உதவியுடன், சுகாதாரதுறையினர் கண்டுபிடித்து, மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் ஒரு நபர் மட்டும் டெல்லியை சேர்ந்த 30 வயதுடைய வாலிபர். இவர் விடுவிக்கப்பட்டதிலிருந்தே தலைமறைவாக உள்ளார். அவரை விழுப்புரம் மற்றும் அண்டை மாநிலமான புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    Covid19 positive person absconded from Villupuram Government Hospital

    இதனிடையே அவரை தேடப்படும் நபராக அறிவித்துள்ளது விழுப்புரம் மாவட்ட நிர்வாகம். மேலும் அந்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டு, அந்த நபர் குறித்து தகவல் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக 04146 223265 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. மேலும் 3 தனிப்படைகள் அமைத்து அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Covid19 positive person absconded from Villupuram Government Hospital

    மேலும் டெல்லி வாலிபர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு முழுக்க முழுக்க சுகாதாரத்துறையின் அலட்சியமே காரணமாக கூறப்படுகிறது. அதேபோல் தனக்கு கொரோனா தொற்று இருக்கும் என்ற தகவலை அந்த வாலிபர் அறிந்துள்ளரா என்பதும் தெரியவில்லை. அவர் விழுப்புரத்தில் தங்கியுள்ளாரா? அல்லது சரக்கு வாகனங்கள் மூலம் தனது சொந்த ஊரான டெல்லிக்கு சென்றுகொண்டிருக்கிறாரா என்ற விவரமும் தெரியவில்லை.

    Covid19 positive person absconded from Villupuram Government Hospital

    Covid19 positive person absconded from Villupuram Government Hospital
    English summary
    Covid19 positive person absconded from Villupuram Government Hospital
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X