புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீச் பக்கம் வராதீங்க.. டாஸ்மாக் கடைகளை மூடுங்க.. விடாமல் துரத்தும் கஜா!

இன்று மாலை கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கஜா புயல், கடலூரில் அதிரடி முன்னெச்சரிக்கை- வீடியோ

    காரைக்கால்: கஜா டாஸ்மாக் வரை புயலை கிளப்பி விட்டான் போலிருக்கிறது!!

    மிரட்டி கொண்டிருக்கும் கஜா புயல் நாளைக்கு காலை கடலூர் - பாம்பன் இடையே, நாகை அருகே கரையை கடக்கும் என்று சொல்கிறார்கள். அப்படியென்றால் மணிக்கு 90 கி.மீ., முதல் 100 கி.மீ., வேகத்துக்கு காத்து பலமாக வீசும் என்று தெரிவித்து வருகிறார்கள்.

     District administration orders to shut down Karaikkal shops in by 5o clock

    இதன்காரணமாக பல இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய இடங்களில்தான் மழை நிறைய பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்றாலும் எச்சரிக்கை காரணமாக கடலூரில் பள்ளி, கல்லூரி மூடப்பட்டன.

    எல்லா கடலோர பகுதிகளிலும் மக்கள் அலார்ட்டாக உள்ளனனர். மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். பல்கலைக் கழக தேர்வுகள் எல்லாம் ஒத்திவைக்கப்பட்டன. புதுச்சேரி கடற்கரை சாலையில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் யாரும் பீச் பக்கம் வரவேண்டாம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    அதைபோலவே கஜா புயல் தீவிரமடைந்து வருவதால், காரைக்காலில் சாயங்காலம் 5 மணிக்கு மேல் எல்லா கடைகள் மற்றும் நிறுவனங்களையும் மூட மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதை தவிர, காரைக்காலில் 2 மணிக்கு மேல் மதுக்கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்களும் வந்து கொண்டிருக்கின்றன.

    English summary
    District administration orders to shut down Karaikkal shops in by 5'o clock
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X