புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும்… புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    புதுச்சேரி, தட்டாஞ்சாவடியை தட்டிச் செல்லப் போவது யார்.. ஒரு விறுவிறு பார்வை- வீடியோ

    புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

    நாடாளுமன்றத் தேர்தலோடு, 18 தொகுதி இடைத் தேர்தலிலும் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது.

    DMK contest in thattanchavady bypoll: Puducherry Chief Minister Narayanasamy announcement

    இன்று மாலை, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினார்.

    அப்போது, காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில் எவை, எவை என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வீட்டுக்கு போங்க.. பேசி தீர்க்கலாம்.. ராமதாஸ் - விஜயகாந்த் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன? வீட்டுக்கு போங்க.. பேசி தீர்க்கலாம்.. ராமதாஸ் - விஜயகாந்த் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன?

    இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, திமுக தலைவர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, மக்களவைத் தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி இடைத் தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த சந்திப்புக்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும் என்று கூறினார்.

    மேலும், புதுச்சேரியில் மக்களவை தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்றும் கூறினார்.

    English summary
    DMK contest in thattanchavady bypoll says Chief Minister Narayanasamy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X