புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"நீங்கள் உட்காருங்க" என ஸ்டாலின் சொல்ல.. "இல்லை பரவாயில்லை" என வைத்திலிங்கம் மறுக்க..!

புதுச்சேரியில் வைத்திலிங்கத்துக்காக முக ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்த வேட்பாளர்.. உட்காரும்படி கேட்டுக்கொண்ட ஸ்டாலின்- வீடியோ

    புதுச்சேரி: பிரச்சாரத்தின்போது நின்று கொண்டே இருந்த புதுச்சேரி வேட்பாளர் வைத்திலிங்கத்தை, உட்காரும்படி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

    பொதுவாக வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் வாக்கு சேகரிக்கும்போது, அந்த வேட்பாளர்கள் கைகூப்பி வணங்கியபடி நின்று கொண்டிருப்பது "பிரச்சார சம்பிரதாயம்"!

    வாக்கு சேகரிக்க 10 நிமிஷம் பேசினாலும் சரி, ஒரு மணி நேரம் பேசினாலும் சரி, அந்த தொகுதி வேட்பாளர் கையை கூப்பியவாறு கடைசிவரை நின்றுகொண்டே இருப்பார்கள்.

    நயினார் நாகேந்திரன் மீது பாட்டில் வீசப்பட்டதா.. தலையில் காயமடைந்ததாக பரபரப்பு நயினார் நாகேந்திரன் மீது பாட்டில் வீசப்பட்டதா.. தலையில் காயமடைந்ததாக பரபரப்பு

    வணக்கம்

    வணக்கம்

    இப்படித்தான் தேனிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது மற்ற வேட்பாளர்கள் எல்லாம் கைகூப்பி நின்று கொண்டே இருக்க, காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனோ, மக்களுக்கு கைகூப்பி வணக்கம் கூட வைக்காமல் இருந்தார்!

    2 முறை முதல்வர்

    2 முறை முதல்வர்

    இந்நிலையில், புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். இவர் 2 முறை முதல்வராக இருந்தவர். 8 முறை எம்எல்ஏவாக தொடர்ந்து வெற்றி பெற்றவர். 69 வயதாகிறது. ஸ்டாலினை விட வயதில் பெரியவர்.

    வாக்கு சேகரிப்பு

    வாக்கு சேகரிப்பு

    இவரையும், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வெங்கடேசனையும் ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது ஸ்டாலின் பேசும்போது அவருக்கு இரண்டு பக்கமும் வேட்பாளர்கள் நின்று கொண்டிருந்தனர்.

    பரவாயில்லை

    பரவாயில்லை

    கொஞ்ச நேரம் கழித்து, வைத்திலிங்கத்தை பார்த்த ஸ்டாலின், "நீங்கள் உட்காருங்கள்" என்றார். அதற்கு வைத்திலிங்கம் "பரவாயில்லை" என்று சொல்லி விட்டு ஸ்டாலின் பேசி முடிக்கும் வரை நின்றுகொண்டே இருந்தார்!

    English summary
    DMK Leader MK Stalin Campigned for Pudhcerry Congress Candidate Vaidhilingam
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X