புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புதுச்சேரியில் திமுக தனித்து போட்டி? முதல்வர் வேட்பாளர் ஜெகத்ரட்சகன்? நாளை மறுநாள் முடிவு அறிவிப்பு?

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் திமுக தனித்து போட்டியிடக் கூடும் என்றும் திமுகவின் முதல்வர் வேட்பாளராக ஜெகத்ரட்சகன் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழக சட்டசபை தேர்தலுடன் புதுவை யூனியன் பிரதேச சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு திமுக அணியில் அதிகபட்சம் 25 தொகுதிகள் வரை ஒதுக்க வாய்ப்புள்ளது.

புதுவை காங். எதிர்காலம்?

புதுவை காங். எதிர்காலம்?

அதேநேரத்தில் புதுவையில் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் உச்சகட்டத்தில் இருக்கிறது. சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் பாஜகவுக்கு தாவ உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதுவையில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

பாஜகவாக மாறும் காங்.

பாஜகவாக மாறும் காங்.

பிற மாநிலங்களைப் போல புதுவையிலும் காங்கிரஸ் காலாவதியாக பாஜகவாக உருமாறும் நிலையில் உள்ளது. இதனால் புதுவையில் தனித்து போட்டியிட வேண்டும் என திமுக நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். 25 ஆண்டுகளுக்கு மேலாக புதுவையில் திமுக தனித்து போட்டியிடவில்லை.

தனித்து போட்டியிடும் திமுக?

தனித்து போட்டியிடும் திமுக?

இதனால் இம்முறை தனித்து போட்டியிட்டு ஆட்சி அமைக்க வேண்டும் என்று அக்கட்சி நிர்வாகிகள் திமுக தலைமையை வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாளை மறுநாள் திங்கள்கிழமை நடைபெறுகிறது. புதுவை திமுக முதல்வர் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனை அறிவிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

முதல்வர் வேட்பாளராக ஜெகத்ரட்சகன்?

முதல்வர் வேட்பாளராக ஜெகத்ரட்சகன்?

நாளை மறுநாள் நடைபெறும் புதுவை திமுக ஆலோசனை கூட்டட்தில் ஜெகத்ரட்சகன் பங்கேற்க உள்ளார். இதற்காக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில், மண்ணின் மைந்தனே வருக! மக்களாட்சி தருக!! என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. இதேபோல் புதுவை திமுக எம்.எல்.ஏ. சிவா, திருவள்ளுவர் நாள் நிகழ்ச்சியில் பேசுகையில், புதுச்சேரியில் திமுக தலைமையில் ஆட்சி அமையும் என பேசியிருப்பதும் குறிப்பிடத்க்கது.

English summary
Sources sadi that DMK will fight Puducherry elections alone and it will be announce Former Union Minister Jagathrakshakan as CM Candidate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X