ஆரோவில்லில் போதைப்பொருள் நடமாட்டம்! விசா இன்றி தங்கினால் நடவடிக்கை.. தமிழிசை எச்சரிக்கை
புதுச்சேரி: சர்வதேச நகரமான ஆரோவில்லில் போதைப்பொருள் நடமாட்டம் உள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் விசா, பாஸ்போர்ட் இல்லாமல் தங்கி இருப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நிர்வாக குழு உறுப்பினரும், துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் செயல்பட்டு வருபவர் தமிழிசை செளந்தரராஜன்.
2 பிஞ்சு குழந்தைகள், நிறைமாத கர்ப்பிணிகள்.. மொத்தம் 5 பேர் தற்கொலை! அதிர்ந்த ராஜஸ்தான்
புதுச்சேரியை அடுத்த சர்வதேச நகரமான ஆரோவில்லில் அன்னை கனவு திட்டத்துக்கான விரிவாக்க பணி நடக்கிறது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் திட்டங்கள் குறித்த கலந்தாய்வு மற்றும் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.

தமிழிசை செளந்தரராஜன்
இதில் ஆரோவில் நிர்வாக குழு உறுப்பினரும், துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் நிர்வாகக் குழு செயலர் ஜெயந்தி ரவி, ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். பசுமை மாறாமல் ஆரோவில்லை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. இதுபற்றி தமிழிசை சொந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டிளியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

90 சதவீதம் பேர் ஒப்புதல்
ஆரோவில் ஒரு சர்வதேச நகரமாகும். சுமார் 200க்கும் அதிக நாடுகளில் இருந்து வந்து வெளிநாட்டினர் வசிக்கின்றனர். 50 ஆயிரம் பேர் வரை தங்க வேண்டிய ஆரோவில் சர்வதேச நகரத்தில் 3 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். இங்கு அன்னையின் கனவு திட்டத்தை நிறைவேற்ற அனைத்து திட்டப்பணிகளும் நடைபெற்று வருகிறது. இயற்கையை அழிக்காமலும், பொதுமக்களுக்கு இடையூறு இன்றியும் திட்டம் நிறைவேற்றப்படும். 90 சதவீத ஆரோவில் வாசிகள் அன்னை கனவு திட்டத்தை நிறைவேற்ற ஒப்புக்கொண்டு உள்ளதாகவும்

போதைப்பொருள் நடமாட்டம்
ஆரோவில்லில் போதைப்பொருள் நடமாட்டம் உள்ளது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆரோவில்லில் விசா, பாஸ்போர்ட் இன்றி தங்கி இருப்பவர்கள் கண்காணிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கண்காணிப்பு பணி ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது.

வேற்றுமையில்லை
இங்கு சாதி, மதம், மொழி, நாடு என்ற எந்த வேற்றுமையும் இல்லாமல் அனைவரும் சகோதரர்களாக இருக்கிறார்கள். ஆரோவில்லில் வசிப்பவர்களுக்கு தனிப்பட்ட வாழ்வுரிமை அளிக்கப்படுகிறது. சட்டரீதியாக அரசாங்க ரீதியில் விதிமீறல் இல்லாமல் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றார்.