புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதுச்சேரிக்கு அடிக்கடி போகும் குடிமகன்களே..இன்று முதல் குஷியான செய்தி..ஆளுநர் எடுத்த சூப்பர் முடிவு

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியில் மதுபானங்களுக்கான கொரோனா வரியை 11 மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை நீக்கி உத்தரவிட்டுள்ளார். இதனால் தமிழகத்துக்கு இணையாக இருந்த விலை இன்று முதல் குறைந்தது. தமிழகத்தை விட பெரிய அளவில் அங்கு விலை குறைந்துள்ளது. அதாவது பழைய விலைக்கு மதுபானங்கள் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.

புதுச்சேரியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனோ வைரஸ் தொற்று வேகமாக பரவத் தொடங்கியது. இதனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கின் காரணமாக மதுபானக் கடைகள், பார்கள் 2 மாதங்களுக்கு மூடப்பட்டன. அதன் பின்னர் மே 24-ம் தேதி மீண்டும் மதுக்கடைகள் புதுச்சேரியில் திறக்கப்பட்டது.

அப்போது, மதுபானங்களுக்கு கொரோனா வரி விதிக்கப்பட்டது. இவ்வரி முதலில் ஆகஸ்ட் மாதம் வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த வரியால் தமிழத்தில் விற்கப்படும் விலைக்கு நிகராக மழதுபானங்களின் விலை கடுமையாக உயர்ந்தது.. இத்தனையும் தமிழகத்தில் கடந்த மே மாதம் மதுபானங்களிலை உயர்த்தப்பட்டது. அந்த விலையும் புதுச்சேரி விலையும் ஒரே அளவில் இருந்தது,

குடிமகன்கள்

குடிமகன்கள்

இதனிடையே நவம்பர் 30 வரைக்கும் மீண்டும் சிறப்பு கலால் வரி என நீட்டிக்கப்பட்டது. கொரோனா பரவலைத் தடுக்கலாம் வேண்டும் என்ற அடிப்படையில் கொரோனா வரி விதிக்கப்பட்டுள்ளதாக அப்போது ஆளுநர் கிரண்பேடி கூறியிருந்தார். ஆனால் கொரோனா வரி போடப்பட்டதால் தமிழகத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் குடிமகன்கள் எண்ணிக்கை கடுமையாக சரிந்தது.

தேர்தல் வரை

தேர்தல் வரை

இதையடுத்து நவம்பர் 29-ம் தேதி கொரோனா வரியை நீக்க அரசுத் தரப்பில் கோப்பு அனுப்பப்பட்டது. ஆனால் அதைக் கிரண்பேடி ஏற்கவில்லை. ஜனவரி 31-ம் தேதி வரை இவ்வரியை மீண்டும் நீட்டித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் இரு மாதங்களுக்கு (மார்ச் 31) வரை மதுபானங்களுக்கான கொரோனா வரி நீட்டிக்கப்பட்டது. மார்ச் 31-ம் தேதி அன்று இவ்வரியானது மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படும் எனவும் தேர்தலுக்காக இந்த நடைமுறை இருக்கும் என்றும் கூறப்பட்டது,

தமிழிசை உத்தரவு

தமிழிசை உத்தரவு

இந்நிலையில் மதுபானங்களுக்கான கொரோனா வரி ஏப்ரல் 7-ம் தேதியுடன் நிறைவடைவதாக புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை புதுச்சேரியில் மதுபானங்களுக்கான கொரோனா வரியை 11 மாதங்களுக்கு பிறகு வரியை குறைத்து அதற்கான கோப்பில் கையெழுத்திட்டுள்ளார். இதனால் புதுவையில் தமிழகத்திற்கு இணையாக உயர்ந்திருந்த மதுபானங்களின் விலை இன்று முதல் குறைந்துள்ளது.

இனி அதிகரிக்கும்

இனி அதிகரிக்கும்

மீண்டும் முன்பிருந்த நிலைப்படி மதுபானங்களின் விலை புதுச்சேரியில் தமிழகத்தை விடக் குறைவாக மதுபானங்கள் விற்கப்படுகிறது. அதாவது கடந்த 2019ல் விற்கப்பட்ட அளவிற்கு மதுபானங்கள் விற்கப்படுகிறது. இந்த விலை குறைப்பால் புதுச்சேரிக்கு அடிக்கடி போகும் குடிமகன்கள் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரி அரசுக்கும், கடைகள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு பழையபடி வருவாய் உயரும் என நம்பப்படுகிறது.

English summary
The Governor of Puducherry has ordered the removal of the corona tax on liquor in Pondicherry after 11 months. Thus the price which was on par with Tamil Nadu is lower from today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X