புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இ சிகரெட்டிலும் புற்று நோய் வரும்.. கிரண் பேடி கவலை.. புதுச்சேரியில் தடை வருகிறது!

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புகைப்பிடிப்பதற்கு மாற்றாகவும், தொடர்ந்து புகை பிடிக்கும் பழக்கும் உள்ளவர்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கும் இ-சிகரெட் கண்டுபிடிக்கப்பட்டது.ஆனால், சிகரெட்டின் தீமைகள் இதில் இல்லை என்று கூறப்பட்டாலும், இதுவும் தீங்கு விளைவிக்கிறது என்று உலக சுகாதாரத்துறை கூறியது சர்ச்சையாகி உள்ளது.

எலக்ட்ரானிக் சிகரெட்டுக்கள், இ சிகரெட்டுக்கள் என்று அழைக்கப்படுகின்றன. இது சிகரெட்டை போன்றே வடிவமைப்புடைய ஒரு மின்னணு கருவி ஆகும். இதை பயன்படுத்தினால் புகைப்பதை போன்றே ஒரு திருப்தி கிடைக்கும். ஆனால் இ-சிகரெட் எந்த நோக்கத்திற்காக கண்டுபிடிக்கப்பட்டதோ அதற்கான நன்மைகள் எதுவும் ஏற்படவில்லை.

இ-சிகரெட்டை பயன்படுத்தபவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கதிலிருந்தும் தங்களை மாற்றிகொள்ளவில்லை. மாறாக இ-சிகரெட்டை புகைப்பதால் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்சினைகள் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

புற்று நோய் வரும்

புற்று நோய் வரும்

மேலும் இதிலுள்ள பார்மால்டி ஹைட் எனும் வேதிப்பொருள் புற்றுநோயை உண்டாக்குவது மட்டுமல்லாம், இ-சிகரெட்டை புகைப்பவர்களால் அருகில் இருப்பவர்களுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

தடை வருமா

தடை வருமா

தமிழகம், கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இ-சிகரெட்டிற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரையில் ஒரு சுற்றுலா நகரம் என்பதால் இ-சிகரெட் சர்வசாதாரணமாக புழக்கத்தில் உள்ளது.

இங்கும் தேவை தடை

இங்கும் தேவை தடை

இ-சிகரெட்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதால் அவற்றை உடனடியாக புதுச்சேரியிலும் தடை செய்ய வேண்டுமென சமூக அமைப்புகள் அரசுக்கு தொடர்ச்சியாக கோரிக்கை வைத்துவந்தன. பல்வேறு தரப்பிலிருந்து வந்த தொடர் அழுத்தத்தின் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் இ-சிகரெட்டை தடை செய்வதென சுகாதாரத்துறை முடிவு செய்து அதற்கான கோப்புகளை துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அனுப்பி வைத்தது.

புதுவையில் தடை வருகிறது

புதுவையில் தடை வருகிறது

தற்போது இ-சிகரெட்டை தடை செய்வதற்கான கோப்பிற்கு கிரண்பேடி ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து புதுச்சேரி மாநிலம் முழுவதும் முழுமையாக இ-சிகரெட்டை தடை செய்து அதிகாரப்பூர்வமாக புதுச்சேரி அரசு விரைவில் அரசாணை வெளியிட உள்ளது.

இதையும் செய்ங்க

இதையும் செய்ங்க

இ-சிகரெட்டை போன்றே புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து சட்டவிரோதமாக புழக்கத்தில் உள்ள கஞ்சா விற்பனையையும் அரசு தீவிரமாக கண்காணித்து தடை செய்ய வேண்டுமென்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

English summary
Those who use e-cigarettes do not change themselves from smoking habits. Studies conducted by the World Health Institute show that the e-cigarette smoking is causing breathing problems including asthma.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X