புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மின்கம்பியில் தொங்கிய மரக்கிளை... உயிரை பணயம் வைத்து அகற்றிய ஊழியர் - பாராட்டிய நாராயணசாமி

புதுச்சேரியில் மின் கம்பியில் மாட்டிய மரக்கிளையை தனது உயிரையும் பொருட்படுத்தாமல், அகற்றிய மின்துறை ஊழியருக்கு முதல்வர் நாராயணசாமி பாராட்டு தெரிவித்தார்.

Google Oneindia Tamil News

புதுச்சேரி: நிவர் புயலின் வேகத்தினால் முறிந்த மரத்தின் கிளை ஒன்று மின்சார கம்பியின் மீது மாட்டிக்கொண்டிருந்தது, ஆபத்தான சூழ்நிலையிலும் மின்சாரத்துறை ஊழியர் அதனை அகற்றினார். உயிரை பணயம் வைத்து பணி செய்த மின்துறை ஊழியரை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பாராட்டினார்.

Recommended Video

    மின் ஒயரில் மாட்டிய மரக்கிளை.. அந்தரத்தில் நின்று அகற்றிய மின்ஊழியர் - வீடியோ

    வங்கக்கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி அருகே நேற்று நள்ளிரவு கரையை கடந்தது. 11 மணியில் இருந்து அதிகாலை வரை கரையைக் கடந்த புயலால் புதுச்சேரியில் காற்றுடன் கனமழை கொட்டியது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 30 செ . மீ மழை பதிவாகி உள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும்போது பாதுகாப்பிற்காக மின்சாரம் நிறுத்தப்பட்டது.

    EB employee who removed the tree in wire - praised the Puduchery Chief Minister

    சூறாவளி காற்று, கனமழையால் புதுச்சேரியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. உடனடியாக மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

    EB employee who removed the tree in wire - praised the Puduchery Chief Minister

    உப்பளம் பகுதியில் அமைந்துள்ள மின்கம்பியில் ஒயரின் மீது மாட்டிக்கொண்டிருந்த மரக்கிளையை மின்துறை ஊழியர் ஆபத்தான சூழ்நிலையிலும் அகற்றினார். அந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஆபத்தான நேரங்களில் பணியை மேற்கொண்ட மின்துறை ஊழியரை முதல்வர் நாராயணசாமி பாராட்டியுள்ளார்.

    EB employee who removed the tree in wire - praised the Puduchery Chief Minister

    நிவர் சோகம் தீர்க்க வேஷ்டியை மடித்துக்கட்டி களமிறங்கிய அமைச்சர்... பாராட்டிய முதல்வர் நிவர் சோகம் தீர்க்க வேஷ்டியை மடித்துக்கட்டி களமிறங்கிய அமைச்சர்... பாராட்டிய முதல்வர்

    English summary
    One of the branches of the tree that had been broken by the speed of the storm was stuck on the power line and the electrical worker removed it in a dangerous situation. Puducherry Chief Minister Narayanasamy praised the power sector employees who risked their lives to work.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X