மின்கம்பியில் தொங்கிய மரக்கிளை... உயிரை பணயம் வைத்து அகற்றிய ஊழியர் - பாராட்டிய நாராயணசாமி
புதுச்சேரி: நிவர் புயலின் வேகத்தினால் முறிந்த மரத்தின் கிளை ஒன்று மின்சார கம்பியின் மீது மாட்டிக்கொண்டிருந்தது, ஆபத்தான சூழ்நிலையிலும் மின்சாரத்துறை ஊழியர் அதனை அகற்றினார். உயிரை பணயம் வைத்து பணி செய்த மின்துறை ஊழியரை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பாராட்டினார்.
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி அருகே நேற்று நள்ளிரவு கரையை கடந்தது. 11 மணியில் இருந்து அதிகாலை வரை கரையைக் கடந்த புயலால் புதுச்சேரியில் காற்றுடன் கனமழை கொட்டியது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 30 செ . மீ மழை பதிவாகி உள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும்போது பாதுகாப்பிற்காக மின்சாரம் நிறுத்தப்பட்டது.

சூறாவளி காற்று, கனமழையால் புதுச்சேரியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. உடனடியாக மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

உப்பளம் பகுதியில் அமைந்துள்ள மின்கம்பியில் ஒயரின் மீது மாட்டிக்கொண்டிருந்த மரக்கிளையை மின்துறை ஊழியர் ஆபத்தான சூழ்நிலையிலும் அகற்றினார். அந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஆபத்தான நேரங்களில் பணியை மேற்கொண்ட மின்துறை ஊழியரை முதல்வர் நாராயணசாமி பாராட்டியுள்ளார்.

நிவர் சோகம் தீர்க்க வேஷ்டியை மடித்துக்கட்டி களமிறங்கிய அமைச்சர்... பாராட்டிய முதல்வர்